அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும்: சீமான்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (101)
Share
Advertisement
சென்னை: மனுதர்மத்தின் நவீன வடிவான நீட் தேர்வை முற்று முழுதாக துடைதெரிய வேண்டும் எனவும், நீட் என்னும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, சமீபத்தில் பிரதமரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து செய்வது
NEET, NTK, Seeman, நீட், நாம் தமிழர் கட்சி, சீமான்,

சென்னை: மனுதர்மத்தின் நவீன வடிவான நீட் தேர்வை முற்று முழுதாக துடைதெரிய வேண்டும் எனவும், நீட் என்னும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, சமீபத்தில் பிரதமரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பான கோரிக்கையை முன்வைத்தார். இந்நிலையில், தமிழகத்தில் தற்போது வரை நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என்பதால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக பயிற்சிகள் அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news



இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டரில் பதிவிட்டதாவது:
நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிராகவும், கூட்டாட்சிக்கு எதிராகவும் கொண்டுவரப்பட்ட நீட் எனும் மத்தியத்தர ஒற்றைத் தகுதித்தேர்வு மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் உழைக்கும் ஆதி தமிழ்க்குடிகளின் பிள்ளைகளை மருத்துவராகவிடாது தடுக்கும் மனுதர்மத்தின் நவீன வடிவான 'நீட்' தேர்வை முற்று முழுதாகத் துடைத்தெரிய இன்றைக்குக் கூடியிருக்கிற முதல் தமிழகச் சட்டசபைக் கூட்டத்திலேயே ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மாநிலத் தன்னாட்சியையும், மாநிலத் தன்னுரிமையையும் நிலைநாட்ட, மண்ணின் மக்களின் நலவாழ்வை உறுதிசெய்ய, மருத்துவராகும் பெருங்கனவை வர்க்க வேறுபாடின்றி யாவருக்கும் உறுதிசெய்ய 'நீட்' எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டுமென அறிவுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri Ra - Chennnai,இந்தியா
22-ஜூன்-202110:51:51 IST Report Abuse
Sri Ra ஆமைக்கறி சொல்லிட்டாரு செஞ்சிடுவோம்
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
22-ஜூன்-202109:58:47 IST Report Abuse
Hari உங்கள் சிந்தனை எப்போதும் சாதாரண பொதுமக்களின் நலனுக்கு எதிரானதாகவே உள்ளதே ஏன் ? முன்னூறு ஆண்டுகளாக கிருத்துவர்களின் அடிமைகளாக இருந்த இந்தியா ஹிந்துக்கள் இன்னும் அப்படியே தான் இருக்கணுமா.மருத்துவப்படிப்பிற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்,இன்று விமர்ச்சிக்கும் பலர் ஏதாவது தகுதியோடுதான் விமர்ச்சிக்கிறார்களா.சும்மா பணம் வருதேன்னு பொய்ச்சாச்சி சொல்லும் கூட்டமாக இருக்காமல் மக்களின் துயர்நீங்க உண்மை பேசுங்கள் சீமான் ,இன்னும் ஆமைக்கறியும் அல்வாவும் என்ற தலைப்பை தொடராமல் மாற்றுங்கள்.நன்றி.
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
22-ஜூன்-202109:24:25 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தடைக்கல் அல்ல. படிக்கல் என்பது அறிவாளிகளுக்கு மட்டும் தெரியும் . தேச துரோகிகளுக்கு தெரியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X