மிஷன் 2024: பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் சந்திப்பு| Dinamalar

'மிஷன் 2024:' பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் மீண்டும் சந்திப்பு

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (17)
Share
புதுடில்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பிரசாந்த் கிஷோரை இரு வார இடைவெளியில் இன்று மீண்டும் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றன. வெற்றி பெற்ற தி.மு.க., மற்றும் திரிணமுல் காங்கிரசுக்காக பிரஷாந்த் கிஷோர் பிரசார வியூகம்

புதுடில்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பிரசாந்த் கிஷோரை இரு வார இடைவெளியில் இன்று மீண்டும் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



latest tamil news



அண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றன. வெற்றி பெற்ற தி.மு.க., மற்றும் திரிணமுல் காங்கிரசுக்காக பிரஷாந்த் கிஷோர் பிரசார வியூகம் அமைத்திருந்தார். ஆனால் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாக தேர்தல் முடிவுகளுக்கு பின் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை பிரசாந்த் கிஷோர் அண்மையில் சந்தித்துப் பேசினார். இது, 'மிஷன் 2024' எனப்படும் அடுத்த லோக்சபாத் தேர்தலை ஒட்டிய திட்டமிடல் எனவும்; அந்த தேர்தலில் பா.ஜ.,வை எதிர்த்து வலிமையுடன் போராட எதிர்க் கட்சிகளை ஒன்றிணைப்பது பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.


latest tamil news




பிரதமர் வேட்பாளர் யார்?


இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பிரசாந்த் கிஷோரை மீண்டும் இன்று சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு வார இடைவெளியில் 2வது முறை சந்திப்பு நடைபெற்றுள்ளது. ரகசியமாக நடந்த இந்த சந்திப்பில் அடுத்த லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜியை முன்னிறுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X