அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாண்புகளை மீறி செயல்படுவதை தடுக்க வேண்டும்

Added : ஜூன் 21, 2021
Share
Advertisement
சென்னை : 'தமிழக சட்டசபையின் மாண்புகளை மீறி நிதி அமைச்சர் தியாகராஜன் செயல்படுவதை, முதல்வர் தடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழக கவர்னர், புதிய அரசின் கொள்கைகள் பற்றி இன்று சட்டசபையில் உரையாற்றுவார் என, செய்தி வெளியாகி விட்டது. தேதி அறிவித்த பின், நிதித்துறை அமைச்சர் தியாகராஜன், 'டிவி' ஒன்றுக்கு பேட்டி


சென்னை : 'தமிழக சட்டசபையின் மாண்புகளை மீறி நிதி அமைச்சர் தியாகராஜன் செயல்படுவதை, முதல்வர் தடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:

தமிழக கவர்னர், புதிய அரசின் கொள்கைகள் பற்றி இன்று சட்டசபையில் உரையாற்றுவார் என, செய்தி வெளியாகி விட்டது. தேதி அறிவித்த பின், நிதித்துறை அமைச்சர் தியாகராஜன், 'டிவி' ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதில், மத்திய அரசு ஓரவஞ்சனையாக செயல்படுகிறது. வரி பணங்களை முறையாக தமிழகத்திற்கு வழங்கவில்லை என கூறியிருப்பது, சட்டசபை மாண்பையும், உரிமைகளையும் மீறும் செயல். மாண்புகளை மீறி செயல்படுவதை, முதல்வர் தடுக்க வேண்டும். இந்த பேட்டியை அமைச்சர் தவிர்த்திருக்கலாம். சட்டசபையில் பேச வேண்டியதை பேட்டியில் கூறக்கூடாது.

இவ்வாறு வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X