சென்னை : புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் மற்றும் கோதாவரி நதிநீர்த் திட்டம் குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பேசியதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினை, தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை பொறுப்பு ஆளுநருமான தமிழிசை சவுந்தராஜன் நேற்று, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்தார்.பின், செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தராஜன் கூறியதாவது:
சட்டசபை தேர்தலுக்குப் பிறகு இப்போதுதான் தமிழகம் வருகிறேன். மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தேன்.புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், கோதாவரி நதிநீர்த் திட்டம் ஆகியவை குறித்து பேசினேன். புதுச்சேரியில் விமான நிலையம் விரிவாக்கப்பட்டால் அது தமிழகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசின் நடவடிக்கைகளால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் இன்னும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE