குன்னூர்: குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் 7வது உலக யோகா தின நிகழ்ச்சியில் 750 இளம் வீரர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று பயிற்சி மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர், வெலிங்டன் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ பயிற்சி மையத்தில், இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராணுவ பயிற்சி மையத்தில் நடந்த 7வது உலக யோகா தின நிகழ்ச்சியில், இளம் வீரர்கள் சமூக இடைவெளியுடன், யோகா பயிற்சி மேற்கொண்டனர். இதில், 750-க்கும் மேற்பட்ட பயிற்சி பெறும் இளம் வீரர்கள், ராணுவத்தினர் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று யோகாசனம் யோகக் கலைகள் மற்றும் சுவாசப் பயிற்சிகள் மேற்கொண்டனர்.
தலைமை வகித்த மெட்ராஸ் ரெஜிமென்ட் பயிற்சி மைய துணை கமாண்டன்ட் கர்னல் குமாரதாஸ் பேசுகையில், "தினமும் யோகா பயிற்சி மேற்கொண்டால் உடல் வலிமையும் நோயற்ற ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும். மையத்தில் உள்ள அனைவரும் தினமும் தற்போது உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்," என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE