பொது செய்தி

தமிழ்நாடு

பொருளாதார நிபுணர்கள் கொண்ட தமிழக ஆலோசனை குழு : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (179)
Share
Advertisement
சென்னை : தமிழக அரசின் முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழுவில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியன் உள்ளிட்ட ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தமிழக அரசின் சட்டசபை கூட்டத்தொடர் இன்று(ஜூன் 21) கவர்னர் உரையுடன் துவங்கியது. இதில் பல்வேறு சிறப்பு
RaghuramRajan, Tamilnadu, TNGovt,

சென்னை : தமிழக அரசின் முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழுவில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியன் உள்ளிட்ட ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தமிழக அரசின் சட்டசபை கூட்டத்தொடர் இன்று(ஜூன் 21) கவர்னர் உரையுடன் துவங்கியது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக பொருளாதார மந்த நிலையை போக்கும் வகையில் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்க முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ, ராஞ்சி பல்கலைக்கழகம், டில்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸின் ஜீன் ட்ரெஸ், முன்னாள் நிதித்துறை செயலர் எஸ்.நாராயணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


இந்த ஐவரும் தமிழக அரசின் பொருளாதார ஆலோசனை குழுவாக நியமிக்கப்பட்டதை பலரும் வரவேற்றுள்ளனர். நிச்சயம் இந்த குழு கடனில் தத்தளிக்கும் தமிழகத்திற்கு சிறந்த ஆலோசனை எடுத்துக்கூறி மாநிலத்தை வளர்ச்சி காண செய்யும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. குறிப்பாக ரகுராம் ராஜன் இந்த குழுவில் இடம் பெற்றதை அதிகமாக வரவேற்றுள்ளனர்.


latest tamil news‛‛அற்புதமான பொருளாதார ஆலோசனை குழு. இவர்களின் வழிகாட்டுதலில் நிச்சயம் தமிழக பொருளாதாரம் வலுப்பெறும். முதல்வரின் ஸ்டாலின் அரசின் வரவேற்கத்தக்க செயல் இது''.
‛‛வட மாநிலங்களை விட தென் மாநிலங்கள் வளர்ச்சி பெற்றவை என்பதை மீண்டும் ஒரு முறை இந்த ஆலோசனை குழு மூலம் நிரூபித்துள்ளது. அனைத்து கேள்விகளுக்கும் ரகுராம் ராஜன் விடை சொல்வார்''.

‛‛ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியனின் திறமையை சரிவர பயன்படுத்தாது இந்தியாவுக்கு தான் நஷ்டம். அந்த வகையில் தற்போதைய திமுக அரசு இவர்களை பயன்படுத்துவது சரியே. தமிழகத்தின் நிதிநிலை விரைவில் சரி செய்யப்படும்''.

இப்படி பலரும் இந்த பொருளாதார ஆலோசனை குழுவை வரவேற்று கருத்து பதிவிட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (179)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridharan - chennai,இந்தியா
25-ஜூன்-202112:50:36 IST Report Abuse
sridharan குழு என்பதற்கு ஆஙகிலத்தில் ஒரு வினோத (கிண்டலான) விளக்கம் உண்டு, அது : குழு என்பது மெம்பர்கள் ஒண்டு கூடி விவாதித்து தம்மால் எதுவும் செய்யமுடியாது என தீர்மானிப்பது
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
27-ஜூன்-202101:46:16 IST Report Abuse
Amal Anandanஇப்போதுள்ள நாடாளுமன்ற குழுவையா சொல்றீங்க?...
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
24-ஜூன்-202118:45:26 IST Report Abuse
C.SRIRAM அதிகப்படியான சமயக்காரர்கள் இருக்கும் சமையல் கூடத்தில் உணவு சுவைக்காது
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-ஜூன்-202120:01:32 IST Report Abuse
Krishnamurthy Venkatesan வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு உரிய அனுமதி பெற வேண்டுமென நினைக்கிறேன். இவர்களுக்கு சம்பளம் INR/DOLLAR இவற்றில் எது? நமது நாட்டின் ரகசியங்கள் கசிந்து விடாதா? எதற்கும் இக்குழுவின் செயல்கள், ஆலோசனைகள் போன்றவற்றை அமல்படுத்துவதற்கு முன்னர் ஒரு மூவர் குழுவை ஏற்படுத்தி அவர்க்ளின் ரெகமெண்டஷனை பரிசீலிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X