செப்., இறுதியில் கோவிட் 3வது அலை: ஐ.ஐ.டி., கான்பூர் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

செப்., இறுதியில் கோவிட் 3வது அலை: ஐ.ஐ.டி., கான்பூர் எச்சரிக்கை

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (15)
Share
புதுடில்லி: 'கோவிட் பெருந்தொற்றின் 3வது அலை இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபரில் ஏற்படும்' என, ஐ.ஐ.டி., கான்பூர் நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.கோவிட் பெருந்தொற்றின் 3வது அலை குறித்து, ஐ.ஐ.டி., கான்பூர் பேராசிரியர் ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேந்திர வெர்மா தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதில் தெரிவித்து

புதுடில்லி: 'கோவிட் பெருந்தொற்றின் 3வது அலை இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபரில் ஏற்படும்' என, ஐ.ஐ.டி., கான்பூர் நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

கோவிட் பெருந்தொற்றின் 3வது அலை குறித்து, ஐ.ஐ.டி., கான்பூர் பேராசிரியர் ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேந்திர வெர்மா தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதில் தெரிவித்து உள்ளதாவது:



latest tamil news



இந்தியாவில், கோவிட் தொற்றின் 3வது அலை, மக்களின் நடத்தை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமையும். 2வது அலை ஏற்பட்ட காலத்தில் கிடைத்திருக்கும் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்திய இந்த ஆய்வில், 3வது அலை மூன்று விதத்தில் அமையலாம் எனத் தெரியவந்துள்ளது.
கோவிட் 3வது அலை செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் உச்சமடையும். இது 2வது அலையைக் காட்டிலும் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால், பாதிப்புக் குறைவாகவே இருக்கும். 3வது அலையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முன்னெச்சரிக்கையாக ஜூலை 15ம் தேதிக்குப் பின் முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



கோவிட் 2வது அலை குறித்து ஐஐடி கான்பூர் குழுவினர் நடத்திய ஆய்வில், 'கோவிட் 2வது அலை மிசோரம், மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களைத் தவிர்த்து, அனைத்து மாநிலங்களிலும் கடும் தீவிரத்தை அடையும்' எனத் தெரிவிக்கப்பட்டது. அந்த கணிப்பு சரியாக அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X