ராகுல் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்: ரவிசங்கர் பிரசாத்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை எனில் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி நிறுவனங்கள், மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் தனியார்
CovidVaccine, Ravi Shankar Prasad, Rahul, ரவிசங்கர் பிரசாத், ராகுல், கோவிட், தடுப்பூசி

புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை எனில் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி நிறுவனங்கள், மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாறுபட்ட விலையில் வழங்குவதாக அறிவித்தன. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தடுப்பூசிகளுக்கு ஒரே மாதிரியான விலை நிர்ணயிக்க வேண்டும், மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் இன்று (ஜூன் 21) முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்திட, மாநிலங்களுக்கு மத்திய அரசே இலவசமாக அளிக்கும் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, இன்று முதல் மத்திய அரசே தடுப்பூசி நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையை தொடர்ந்து விமர்சித்து வந்த ராகுலுக்கு பா.ஜ., தலைவர்கள் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்கவில்லை. நீங்கள் இன்னும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை எனில் உடனடியாக போட்டுக் கொள்ளவும். இதனை உங்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
22-ஜூன்-202113:51:25 IST Report Abuse
nagendirank ராகுல் இன்னும் பதினெட்டு வயதை தாண்டவில்லை அமைச்சர் அவர்களே . தடுப்பூசிக்கே தகுதி அடையவில்லை இவரெங்கே எப்போது தலைவராக தகுதி அடைவது எல்லாம் காலத்தின் கட்டாயம் . காங்கிரஸ்க்கு குழந்தை தலைவர் .
Rate this:
Cancel
Guna - Chennai,இந்தியா
22-ஜூன்-202110:28:27 IST Report Abuse
Guna ராகுல் கண்டி ஒரே ஒரு நாள் தான் மேற்கு வங்காளத்தில் பிரச்சாரம்??? செய்தார். தனக்கு கரோனா வந்து விட்டதாக கூறி மறைந்து கொண்டார். அதற்குப் பிறகுதான் இந்த இரண்டாம் அலை என்பது ஏற்பட்டது. இதில் ஏதாவது சங்கதி உண்டோ?????
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
22-ஜூன்-202107:53:09 IST Report Abuse
blocked user அவர் வயதுக்கு வரவில்லையாம்... தப்பு... தப்பு... அவருக்குத்தான் இன்னும் வயது வரவில்லையே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X