ராகுல் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்: ரவிசங்கர் பிரசாத்| Dinamalar

ராகுல் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்: ரவிசங்கர் பிரசாத்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (29)
Share
புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை எனில் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி நிறுவனங்கள், மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் தனியார்
CovidVaccine, Ravi Shankar Prasad, Rahul, ரவிசங்கர் பிரசாத், ராகுல், கோவிட், தடுப்பூசி

புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை எனில் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி நிறுவனங்கள், மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாறுபட்ட விலையில் வழங்குவதாக அறிவித்தன. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தடுப்பூசிகளுக்கு ஒரே மாதிரியான விலை நிர்ணயிக்க வேண்டும், மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் இன்று (ஜூன் 21) முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்திட, மாநிலங்களுக்கு மத்திய அரசே இலவசமாக அளிக்கும் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, இன்று முதல் மத்திய அரசே தடுப்பூசி நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையை தொடர்ந்து விமர்சித்து வந்த ராகுலுக்கு பா.ஜ., தலைவர்கள் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்கவில்லை. நீங்கள் இன்னும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை எனில் உடனடியாக போட்டுக் கொள்ளவும். இதனை உங்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X