பொது செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வு தாக்கம் குறித்து 25 ஆயிரம் பேர் கருத்து: ஏ.கே.ராஜன்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (92)
Share
Advertisement
சென்னை: நீட் தேர்வு தாக்கம் குறித்து இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஏ.கே.ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு தாக்கம் குறித்து 25 ஆயிரம் பேரிடம் இருந்து கருத்துகள் வந்துள்ளன. பெரும்பாலும்
NEET, AKRajan, Public Opinion, நீட், ஏகேராஜன், கருத்துகள்,

சென்னை: நீட் தேர்வு தாக்கம் குறித்து இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஏ.கே.ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு தாக்கம் குறித்து 25 ஆயிரம் பேரிடம் இருந்து கருத்துகள் வந்துள்ளன. பெரும்பாலும் இ-மெயிலில் தான் கருத்துகள் வந்தன. அதில், சிலர் நீட் வேண்டும் எனவும், சிலர் வேண்டாம் எனவும், சிலர் குறிப்பிட்ட வருடங்களுக்கு மட்டும் நீட் வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அரசு நிர்ணயித்துள்ள வரம்புக்குள் கருத்துகளை திரட்டி வருகிறோம். அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்த பின்னர் எங்களது அறிக்கை இறுதி செய்யப்படும்.


latest tamil news


அரசாணைப்படி முடிந்தளவு ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அவசியம் ஏற்பட்டால் கூடுதல் அவகாசம் கேட்போமா என்பது தெரியாது. நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது. ஒவ்வொருவரின் காரணம் வெவ்வேறாக உள்ளது. எங்கள் குழுவினர் சனி, ஞாயிறு கிழமைகளில் கூட பணியாற்றுகின்றனர். அரசின் விதிமுறைகளை தாண்டி எங்களது பரிந்துரைகள் இருக்காது, விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
22-ஜூன்-202113:29:42 IST Report Abuse
Sridhar இவிங்க மேல உச்ச கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒன்னு போட்டாதான் அடங்குவானுங்க போல.
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
22-ஜூன்-202111:45:51 IST Report Abuse
N. Srinivasan மெயில் மூலமாக கருத்து வாங்குவது தவறு. நீட் அப்ளை செய்த மாணவர்களிடம் வாங்க வேண்டும். எல்லோரிடமும் ஒரு போர்டல் மூலமாக கருத்து வாங்க வேண்டும். அதில் அவர்களுடைய தாய் தந்தை சம்மதமும் வாங்க வேண்டும். மெயில் வாங்குவது என்பது ஒரு கண்முடி வேலை. யாரும் படிக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
22-ஜூன்-202110:40:13 IST Report Abuse
blocked user ஒவ்வொரு கருத்தையும் ஆராய ஆரம்பிக்கும் பொழுது எட்டுக்கோடிக்கு மேல் கருத்து வந்திருக்கும். தமிழகத்திலிருந்து ஏழு கோடி 99 லட்சம் கருத்தும் மீதி பாக்கிஸ்தானிலிருந்தும் வந்திருக்கும்... எப்படியோ ஓய்வி பெற்ற பல திமுக நிதிபதிகளுக்கு வேலையுடன் சம்பளமும் கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X