பொது செய்தி

இந்தியா

ஒரே நாளில் இந்தியா முழுவதும் 80.96 லட்சம் டோஸ்..!

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: உலகம் முழுவதும் தற்போது கோவிட்-19 வைரஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை அதிவேகமாகப் பரவிவருகிறது. இதனையடுத்து உலக நாடுகள் பல தங்களை கோவிட் வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.இந்தியாவில் கோவிட் வைரஸின் இரண்டாவது அலை தாக்கத்தை அடுத்து கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பு மருந்துகள் அதிவேகமாக பொதுமக்களுக்கு
CovidVaccine, India, Doses, கோவிட், கொரோனா, தடுப்பூசி, இந்தியா, டோஸ்

புதுடில்லி: உலகம் முழுவதும் தற்போது கோவிட்-19 வைரஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை அதிவேகமாகப் பரவிவருகிறது. இதனையடுத்து உலக நாடுகள் பல தங்களை கோவிட் வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் கோவிட் வைரஸின் இரண்டாவது அலை தாக்கத்தை அடுத்து கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பு மருந்துகள் அதிவேகமாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இன்று (ஜூன் 21) இரவு 8 மணிவரை ஒரேநாளில் நாடு முழுவதும் 80.96 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இத்தனை டோஸ் தடுப்பு மருந்துகள் இந்திய மக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளுக்குநாள் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரித்துவருவது மக்களை பாதுகாக்க உதவுகிறது.18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news



இன்று முதல் மத்திய அரசே தடுப்பூசி நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரே நாளில் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதே முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது இரண்டாம் அலையின் போது அந்த சாதனையை முறியடிக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் அதிக அளவு தடுப்பு மருந்து செலுத்திய சுகாதாரத்துறை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல அனைத்து மாகாணங்களிலும் தடுப்பு மருந்து செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


latest tamil news



இதன்மூலம் தொடர்ந்து 6வது நாளாக நாடு முழுவதும் 30 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று இரவு 8 மணிவரை 80.96 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 12 லட்சம் பேருக்கும், கர்நாடகாவில் 8.7 லட்சம் பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 5.8 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சோலைபட்டி பார்த்திபன் இன்று காலை. 18. to 45. ... வயது உடையவர்களுக்கு தடுப்பூசி போட மறுத்து விட்டனர்...அவர்களை திருப்பி அனுப்பவில்லை என்றால்.... கோடி களில்... இருக்கும்....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-ஜூன்-202120:10:11 IST Report Abuse
Ramesh Sargam அற்புதம். இதே போல் வரும் நாட்களிலும் தடுப்பூசி போடப்படுமானால், நாம் மூன்றாம் அலையை எதிர்கொள்ள தேவை இருக்காது. கொரானா ஒழியும். எல்லாம் சுபத்தில் முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X