பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 7,427 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 7,424 பேரும் பிற மாநிலத்தவர் 3 பேரையும் சேர்த்து 7,427 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 189 பேர் உயிரிழந்து உள்ளனர். 15,281 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 31 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 40 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.இது தொடர்பாக

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 7,424 பேரும் பிற மாநிலத்தவர் 3 பேரையும் சேர்த்து 7,427 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 189 பேர் உயிரிழந்து உள்ளனர். 15,281 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 31 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 40 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.



latest tamil news



இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 70,923 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 7,427 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,29,924 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,13,40,264 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 4,267 பேர் ஆண்கள், 3,160 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,21,293 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,08,593 ஆகவும் அதிகரித்து உள்ளது. 15,281 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,37,209 ஆக உயர்ந்துள்ளது.

189 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 82 பேர் தனியார் மருத்துவமனையிலும், 107 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,386 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
22-ஜூன்-202111:30:09 IST Report Abuse
duruvasar அப்போ இன்னும் 6 நாளில் மாசு வை வேலைய விட்டு தூக்ககிடுவாங்களா ?
Rate this:
Cancel
Sreenivas Jeyaraman - Madurai,இந்தியா
21-ஜூன்-202123:00:29 IST Report Abuse
Sreenivas Jeyaraman இன்று கொரோனா பாதிப்பு செங்கல்பட்டு ...1909 சென்னை 1343 ... காஞ்சிபுரம் 441 திருவள்ளூர் 991 ...இந்த புள்ளிவிவரம் படி மதுரை போன்ற நகர்களின் தொற்று பாதிப்பு 753 மட்டுமே .... மேலும் இந்த நான்கு மாவட்டமும் அதிக மக்கள் நெருக்கடி உள்ளவை...எதனால் தளர்வு அதிகம் தரப்பட்டுள்ளது...விடை அறிய முடியவில்லை.... அறிந்தவர் பகிரவும் ... நன்றி....
Rate this:
ஷண்முக பிரியன் - AMBATTUR,இந்தியா
22-ஜூன்-202112:57:15 IST Report Abuse
ஷண்முக பிரியன் சென்னையில் நீ சொன்ன கூத்து TREATMENTIL உள்ளவர்கள் சென்னையில் 439 chenglepet 310 தான் அரண்டு பொய் உள்ளேன் இல்லை படிக்கச் தெரியாது என்றால் படிச்ச பிள்ளைகளை இடம் கேட்கவும்...
Rate this:
Cancel
21-ஜூன்-202121:59:19 IST Report Abuse
நந்தகுமார் து உண்மையாக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X