சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அடுத்ததும் நாங்கள் தான்!

Added : ஜூன் 21, 2021
Share
Advertisement
அடுத்ததும் நாங்கள் தான்!'தேர்தல் வந்தால் தான், நம் அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஞாபகம் வரும் போலிருக்கிறது' என, முணுமுணுக்கின்றனர் உத்தர பிரதேச மாநில மக்கள். இங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 'கொரோனா காலத்தில் சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை' என, யோகி அரசு மீது கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன் வைத்தன.யோகி

 அக்கம் பக்கம்


அடுத்ததும் நாங்கள் தான்!


'தேர்தல் வந்தால் தான், நம் அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஞாபகம் வரும் போலிருக்கிறது' என, முணுமுணுக்கின்றனர் உத்தர பிரதேச மாநில மக்கள். இங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 'கொரோனா காலத்தில் சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை' என, யோகி அரசு மீது கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன் வைத்தன.
யோகி ஆதித்யநாத்தை, பா.ஜ., மேலிட தலைவர்கள் டில்லிக்கு அழைத்து விசாரித்தனர். அவரது முதல்வர் பதவி பறிக்கப்படும் என பேசப்பட்டது.ஆனாலும் மாநிலத்தில், தான் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறி, தலைவர்களை சமாதானப் படுத்தி, லக்னோ திரும்பினார் யோகி. அடுத்தாண்டு துவக்கத்தில் உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று, முதல்வர் பதவியை தக்க வைக்கும் முயற்சியில்
இறங்கியுள்ளார் யோகி. இதற்காக, அவர் முதலில் குறிவைத்திருப்பது, மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களை தான். இவர்களுக்காக சிறப்பு உதவி மையம், கண்காணிப்பு மையம், உதவித்தொகை, சுகாதார காப்பீட்டு திட்டம் ஆகியவற்றை அறிவித்துள்ளார்.யோகி ஆதித்யநாத்தின் இந்த அதிரடி, எதிர்க்கட்சிகளை கலங்கடித்துள்ளது. 'தேர்தலுக்காக திட்டங்களை அறிவிக்கிறார். மக்கள் மீது இவருக்கு அக்கறை இல்லை' என, பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.பா.ஜ.,வினரோ, 'எவ்வளவு வேண்டுமானாலும் கதறுங்கள்; அடுத்த தேர்தலிலும் எங்கள் ஆட்சி தான்' என, கிண்டலடிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X