பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 21, 2021
Share
Advertisement
ஜூன் 22, 2014சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், 1949 ஏப்., 3ம் தேதி பிறந்தவர், ராம நாராயணன். சினிமாவில் பாடலாசிரியராக வேண்டும் என, சென்னைக்கு வந்தார். ஆனால் அவர், ஆசை அறுபது நாள் என்ற படத்திற்காக கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். பின், சுமை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்தார். தொடர்ந்து பல படங்களை இயக்கி, 1980 - 19-90-களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். 36 ஆண்டுகளில், 125


இதே நாளில் அன்று


ஜூன் 22, 2014



சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், 1949 ஏப்., 3ம் தேதி பிறந்தவர், ராம நாராயணன். சினிமாவில் பாடலாசிரியராக வேண்டும் என, சென்னைக்கு வந்தார். ஆனால் அவர், ஆசை அறுபது நாள் என்ற படத்திற்காக கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். பின், சுமை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்தார். தொடர்ந்து பல படங்களை இயக்கி, 1980 - 19-90-களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். 36 ஆண்டுகளில், 125 படங்களை இயக்கி, உலக சாதனை படைத்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, போஜ்பூரி, ஒரியா உட்பட ஒன்பது மொழிகளில் படங்கள் இயக்கியுள்ளார்.

45க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். கடந்த, 1989-ல் நடந்த சட்டசபை தேர்தலில், காரைக்குடி தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டார். 2014 ஜூன் 22ல் தன் 65வது வயதில் இயற்கை எய்தினார்.இயக்குனர் ராம நாராயணன் காலமான தினம் இன்று!



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X