கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் சாதனை: பிரதமர் மோடி மகிழ்ச்சி | Dinamalar

கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் சாதனை: பிரதமர் மோடி மகிழ்ச்சி

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (5)
Share
கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் இன்று படைத்துள்ள சாதனை மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி என்ற மத்திய அரசின் திருத்தப்பட்ட தடுப்பூசி கொள்கை அமலுக்கு வந்துள்ள நிலையில் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 80 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதுகுறித்து

கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் இன்று படைத்துள்ள சாதனை மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.latest tamil newsஇன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி என்ற மத்திய அரசின் திருத்தப்பட்ட தடுப்பூசி கொள்கை அமலுக்கு வந்துள்ள நிலையில் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 80 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.


latest tamil newsஇதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டரில்:
கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் இன்று படைத்துள்ள சாதனை மகிழ்ச்சியளிக்கிறது. கோவிட் தொற்றுக்கு எதிரான நமது வலிமையான ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், அனைத்து குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய கடுமையாக போராடும் முன்களப் பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Today's record-breaking vaccination numbers are gladdening. The vaccine remains our strongest weapon to fight COVID-19. Congratulations to those who got vaccinated and kudos to all the front-line warriors working hard to ensure so many citizens got the vaccine.
Well done India!

— Narendra Modi (@narendramodi) June 21, 2021

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X