2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த மூன்றாவது அணி?

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (32+ 18)
Share
Advertisement
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கான கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார். வரும் 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆட்சியில் இருந்து நீக்க, மூன்றாவது அணியை உருவாக்குவது குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி
2024 லோக்சபா தேர்தல், பா.ஜ.,, வீழ்த்த...மூன்றாவது அணி? ,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கான கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார். வரும் 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆட்சியில் இருந்து நீக்க, மூன்றாவது அணியை உருவாக்குவது குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் செய்த அதிரடி பிரசாரத்தின் பலனாக பா.ஜ., ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மம்தா மீண்டும் வெற்றி பெற்றார். இவரது கட்சிக்கான தேர்தல் பிரசார வியூகங்களை, பிரசாந்த் கிஷோர் தலைமையிலான 'ஐபேக்' நிறுவனம் செய்தது. இவரது தேர்தல் வியூகங்கள் மேற்கு வங்கத்தில் சிறப்பாக செயல்பட்டதாக பல்வேறு கட்சி தலைவர்கள் கருதுகின்றனர்.

இதையடுத்து பிரசாந்த் கிஷோரின் உதவியுடன், 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றா வது அணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற, பல்வேறு எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் தேசிய வாத காங்., தலைவர் சரத் பவாரை, மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு மூன்று மணி நேரம் நீடித்தது.அப்போது, மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., வெற்றி பெற வகுக்கப்பட்ட வியூகங்கள் குறித்து, பிரசாந்த் கிஷோர் விளக்கியதாக கூறப்படுகிறது. மேலும், 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்க்க தயாராக இருப்பதாக, சரத் பவார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மூன்றா வது அணி உருவாவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், சரத் பவார் - பிரசாந்த் கிஷோர் இரண்டாவது முறையாக டில்லியில் நேற்று சந்தித்து பேசினர். கடந்த 10 நாட்களுக்குள் நடக்கும் இரண்டாவது சந்திப்பு என்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சந்திப்புக்கு பின், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் மற்றும் திரிணமுல் காங்.,கில் சமீபத்தில் இணைந்த, மூத்த அரசியல் தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் தரப்பில் இருந்து, காங்., தவிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதில், 'நம் நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்க, சரத் பவார் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் கூட்டத்துக்கு இன்று ஏற்பாடு செய்துள்ளனர். நீங்கள் அனைவரும் தவறாது இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசை, அடுத்த லோக்சபா தேர்தலில் வீழ்த்த, மூன்றாவது அணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சோனியாவும் ஆலோசனை



அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உ.பி.,யில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டன. அடுத்த மாதம் முதல், பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்திற்கு வாரம் ஒரு முறை பயணம் செய்யவுள்ளார்.காங்., ஆளும் முக்கிய மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப்பில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு இடையிலான பிரச்னை தீவிரமாகி வருகிறது.மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதில் இருந்து, தேசிய அரசியல் சூழ்நிலையும் மாறி வருகிறது.

அடுத்த லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக யாரை முன்நிறுத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், காங்., கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனையை துவக்கியுள்ளது. அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நாளை மறுதினம் நடக்கவுள்ளது. சோனியா தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அகில இந்திய பொதுச்செயலர்கள், அனைத்து மாநிலங்களின் மேலிட பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். - புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (32+ 18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
23-ஜூன்-202113:51:51 IST Report Abuse
மூல பத்திரம் மூண்டாவது அணி வரட்டும் எதிர்ப்பு வாக்குகள் பிரியும்
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
22-ஜூன்-202118:58:06 IST Report Abuse
Sivaraman ஜெகஜீவன்ராமை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி என்ன நடந்தது என்பது இன்றும் நினைவில் உள்ளது. மேற்கு வங்காளத்தில் தேர்தல் சமயம் ஆஸ்பத்திரி நாடகம் அரங்கேற்றியது போன்று இனி நடத்த முடியாது
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
22-ஜூன்-202116:53:02 IST Report Abuse
Sivaraman ஒரிசா முதல்வர் பிரதமரிடம் மிகவும் இணக்கமாக செயல்பட்டு வரும் முதல்வர்/. சந்திரபாபு நாயுடு பாஜக உறவுக்கு முயற்சிக்கிறார் என்ற செய்தி உண்டு . ஜெகன்மோகன் நல்ல உறவுடன் ஒட்டி வருகிறார் . இந்தியாவில் சோனியா குடும்பம் முதல் கருணாநிதி குடும்பம் வரை குடும்ப அரசியலுக்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X