கொரோனாவை எதிர்க்கும் சக்தி யோகா: பிரதமர் மோடி பேச்சு| Dinamalar

கொரோனாவை எதிர்க்கும் சக்தி யோகா: பிரதமர் மோடி பேச்சு

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (18)
Share
புதுடில்லி: ''கொரோனா வைரசை எதிர்க்கும் சக்தியையும், புதிய நம்பிக்கையையும் யோகா பயிற்சி நமக்கு அளித்தது,'' என, பெருமையுடன் குறிப்பிட்ட மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். சர்வதேச யோகா தினத்தின் ஏழாவது ஆண்டு நேற்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாட்டு மக்களுக்கு, 'டிவி' வாயிலாக பிரதமர் மோடி நேற்று உரையாற்றியதாவது:கொரோனா வைரஸ் பரவ துவங்கியபோது,
கொரோனா, சக்தி, யோகா , திருக்குறள்,  காட்டி

புதுடில்லி: ''கொரோனா வைரசை எதிர்க்கும் சக்தியையும், புதிய நம்பிக்கையையும் யோகா பயிற்சி நமக்கு அளித்தது,'' என, பெருமையுடன் குறிப்பிட்ட மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். சர்வதேச யோகா தினத்தின் ஏழாவது ஆண்டு நேற்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, நாட்டு மக்களுக்கு, 'டிவி' வாயிலாக பிரதமர் மோடி நேற்று உரையாற்றியதாவது:கொரோனா வைரஸ் பரவ துவங்கியபோது, எந்த நாடும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கவில்லை. பரவல் துவங்கிய பிறகே, அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்கத் துவங்கின. அந்த இக்கட்டான காலகட்டத்தில் நமக்கு மன வலிமையை அளித்தது யோகா தான்.



புத்துணர்ச்சி



கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள வீரர்கள் பலரும் யோகா பயிற்சியே தங்களுக்கு புதிய சக்தியையும், நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் அளித்ததாக கூறினர்.பல மருத்துவமனைகளில், டாக்டர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கும், நோயாளி களுக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சியை பலரும் கற்கத் துவங்கினர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகெங்கும் பெரிய அளவில் விழாக்கள், நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. ஆனாலும், யோகா தினம் வழக்கமான உற்சாகத்துடன் மக்களால் கொண்டாடப்படுகிறது.உலக சுகாதார அமைப்புடன் இணைந்து, யோகா பயிற்சிகளை செய்வதற்கான, 'எம் யோகா' என்ற செயலியை உருவாக்கிஉள்ளோம். வீட்டில் இருந்தே மிக சுலபமாக யோகாவை கற்கும் வகையில் பல மொழிகளில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.


மன வலிமை



தமிழ் புலவர் திருவள்ளுவர், 'நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' எனக் கூறியுள்ளார். நோயின் வேரை அறிந்து அதற்கேற்ப சிகிச்சையையும் யோகா அளிக்கிறது. இது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல; நம் மன வலிமையையும் வலுப்படுத்துகிறது.

நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையாக இதை கூறலாம். கொரோனா காலத்தில், உலகெங்கும் உள்ள மக்களுக்கு புதிய நம்பிக்கையையும், மன நம்பிக்கையையும் அளித்தது யோகா. மற்றவர்களுடன் ஒற்றுமையாக இருப்பது, மற்றவர் நலனில் அக்கறை செலுத்துவது போன்ற குணங்களையும் யோகா வளர்க்கிறது. யோகா நம் வாழ்வின் வழிமுறையானால், எந்த பிரச்னையையும் எதிர்கொள்ள முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X