பொது செய்தி

இந்தியா

ஒரே நாளில் 81 லட்சம் 'டோஸ்' தடுப்பூசி : செலுத்தி சாதனை

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :நாடு முழுதும் நேற்று ஒரே நாளில், 80 லட்சத்து 95 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தடுப்பூசி தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டார். அதன்படி, மொத்த தடுப்பூசி தயாரிப்பில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக
ஒரே நாள், 81 லட்சம் ,டோஸ் ,  செலுத்தி சாதனை

புதுடில்லி :நாடு முழுதும் நேற்று ஒரே நாளில், 80 லட்சத்து 95 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தடுப்பூசி தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டார். அதன்படி, மொத்த தடுப்பூசி தயாரிப்பில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். எஞ்சிய 25 சதவீத தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. புதிய தடுப்பூசி விதிமுறைகள் சர்வதேச யோகா தினமான நேற்று அமலுக்கு வந்தன.
இதன்படி, நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் நாளான நேற்று, 80 லட்சத்து 95 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன், ஏப்., மாதத்தில் தான், ஒரே நாளில் 43 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.இந்தாண்டு இறுதிக்குள், அனைவருக்கும் தடுப்பூசி போட திட்டமிட்டு, அதற்காக பல நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்யும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.




பிரதமர் மோடி மகிழ்ச்சி



உலகின் மிக பிரமாண்டமான இலவச தடுப்பூசி திட்டம் குறித்து, பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:நாட்டின் தடுப்பூசி இயக்கத்தில் தற்போது ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் இளைஞர்கள் பயனடையும் நிலை உருவாகி உள்ளது.சாதனை அளவாக ஒரே நாளில் 80 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தடுப்பூசி தான் கொரோனாவுக்கு எதிரான சக்திவாய்ந்த ஆயுதம். தடுப்பூசி செலுத்திக் கொள்வோம் என, அனைவரும் உறுதி ஏற்பதுடன், கொரோனாவுக்கு எதிரான போரில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தடுப்பூசி போடும் பணியின் வேகத்தை அதிகரிக்க முடிவு



'வரும் ஜூலை - ஆகஸ்ட் மாதம் முதல், கொரோனா தடுப்பூசி போடும் பணியின் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்தார்.குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள தடுப்பூசி மையத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா நேற்று ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:கொரோனாவுக்கு எதிரான போரில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய பயணம் துவங்கி உள்ளது. நாடு முழுதும் உள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.இந்தியாவை போன்ற மக்கள்தொகை உடைய நாட்டில், இலவசமாக தடுப்பூசி வழங்குவது மிகப்பெரிய முடிவு. சர்வதேச யோகா தினத்தில் இந்த மிகப்பெரிய திட்டம் நாடு முழுதும் வேகம் எடுத்துள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கு விரைவில் சாத்தியமாகும்.
ஜூலை - ஆகஸ்ட் மாதம் முதல், தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
22-ஜூன்-202107:05:27 IST Report Abuse
blocked user சிறப்பு. அனைவரும் தடுப்பூசி போட்டால் நிலைமை வெகுவாக மேம்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X