முதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
தெலுங்கானாவில், முதல்வர் காலில் கலெக்டர்கள் விழுந்து வணங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.சித்திபேட்டை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தை, முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். அப்போது அந்த மாவட்ட கலெக்டர் வெங்கடராம் ரெட்டி, அருகில் இருந்த
முதல்வர் காலில் ,விழுந்த கலெக்டர் ,சர்ச்சை, தெலுங்கானா,சந்திரசேகர் ராவ்

தெலுங்கானாவில், முதல்வர் காலில் கலெக்டர்கள் விழுந்து வணங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.

சித்திபேட்டை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தை, முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். அப்போது அந்த மாவட்ட கலெக்டர் வெங்கடராம் ரெட்டி, அருகில் இருந்த முதல்வர் சந்திரசேகர ராவின் கால்களை தொட்டு வணங்கினார்.


latest tamil news




மாநில தலைமைச் செயலர் சோமேஷ் குமார் உள்ளிட்ட பல மூத்த அரசு அதிகாரிகளுக்கு முன்னிலையில், முதல்வரின் கால்களை ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தொட்டு வணங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கலெக்டர் வெங்கடராம் வெளியிட்ட அறிக்கையில், ''முதல்வர் எனக்கு தந்தையைப் போன்றவர். விசேஷமான நாட்களில் பெரியவர்களிடம் ஆசி பெறுவது மாநில கலாசாரம். எனவே, புதிய அலுவலகத்தில் பொறுப்பேற்பதற்கு முன், அவரிடம் ஆசி பெற்றேன்,'' என, விளக்கம் அளித்தார்.

இதேபோல் கமரெட்டி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் சந்திரசேகர ராவின் காலில், கலெக்டர் சரத் விழுந்து வணங்கினார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான இவர்கள், முதல்வர் காலில் விழுந்து வணங்கியதற்கு, பல தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
22-ஜூன்-202113:41:23 IST Report Abuse
Vena Suna என்று மடியும் இந்த அடிமையின் மோகம்பாரதியார்
Rate this:
Cancel
mariyappangopinathan - Chennai,இந்தியா
22-ஜூன்-202111:09:06 IST Report Abuse
mariyappangopinathan இதில் என்ன வருத்தப்பட இருக்கிறது? வயதானவர்களுக்கு மரியாதை கொடுப்பது இந்திய கலாச்சாரம். அதன்படி அவர் காலில் விழுந்துள்ளார்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜூன்-202113:17:40 IST Report Abuse
தமிழவேல் அதுக்கு அவரு கல்லாதான் விழனுமா ? கோவில் வாசல்ல எத்தினியோ வயசானவங்க குந்திகினு இருக்காங்களே...🤔...
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22-ஜூன்-202109:51:27 IST Report Abuse
A.George Alphonse இதுபோன்ற அரைவேக்காடு, படித்தும் மூளை இல்லாத IAS அதிகாரிகளால்தான் இவர்களின் பதவிக்கு மரியாதையும், கௌரவமும் இல்லாமல் போயிவிட்டது.இவர்கள் கலக்டர் பதவிக்கே அருகதை அற்றவர்கள்.மகா கேவலமான பிறவிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X