அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது: இ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்., கருத்து

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (8+ 27)
Share
Advertisement
சென்னை:''தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும், கவர்னர் உரையில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. உறுதிப்பாடு இல்லாத குழப்பமான உரை,'' என, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., தெரிவித்தார். சட்டசபை வளாகத்தில், அவர் அளித்த பேட்டி: கவர்னர் உரையில், முக்கியமான முன்னோடி திட்டங்கள் எதுவும் இடம் பெறாதது, ஏமாற்றம் அளிக்கிறது. சட்டசபை தேர்தலின் போது, 550 அறிவிப்புகளை தி.மு.க.,
கவர்னர் உரை ஏமாற்றம், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., கருத்து

சென்னை:''தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும், கவர்னர் உரையில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. உறுதிப்பாடு இல்லாத குழப்பமான உரை,'' என, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., தெரிவித்தார். சட்டசபை வளாகத்தில், அவர் அளித்த பேட்டி:

கவர்னர் உரையில், முக்கியமான முன்னோடி திட்டங்கள் எதுவும் இடம் பெறாதது, ஏமாற்றம் அளிக்கிறது. சட்டசபை தேர்தலின் போது, 550 அறிவிப்புகளை தி.மு.க., வெளியிட்டது.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அவை நடைமுறைப்படுத்தப்படும் என, வாக்குறுதி அளித்தனர். அதில் முக்கியமான வாக்குறுதி கூட, கவர்னர் உரையில் இடம்பெறவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் என்றனர்.

தற்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், இன்னமும் நீட் தேர்வு முடிவுக்கு வரவில்லை. மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என, தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின் ஒரு பேச்சு என்ற நிலையை காண முடிகிறது. விவசாயிகள் வாங்கிய பயிர்கடனை, அ.தி.மு.க., அரசு ரத்து செய்து, அரசாணை வெளியிட்டது. பலருக்கு கடனை ரத்து செய்ததற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, கடன் ரத்து செய்யப்பட்டதற்கான, சான்றிதழ் வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். ஐந்து சவரனுக்கு குறைவாக, கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில், கடன் வாங்கியிருந்தால், கடன் தள்ளுபடி செய்யப்படும். மகளிர் சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.பெட்ரோலுக்கு, ஐந்து ரூபாய்; டீசலுக்கு, நான்கு ரூபாய் குறைக்கப்படும். குடும்ப தலைவியருக்கு, மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை, 1,000 ரூபாய் என்பது, 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

காஸ் சிலிண்டர்களுக்கு, 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என, தேர்தலின் போது வாக்குறுதி அளித்தனர். அவை எதுவும், கவர்னர் உரையில் இடம் பெறவில்லை. கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு விரிவான அறிக்கை தயார் செய்து, மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அதை கவர்னர் உரையில் குறிப்பிடாதது, விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை, தி.மு.க., அரசு முறையாக கையாளவில்லை. தமிழகத்தில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது மறைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இறந்தவர்களுக்கு, இறப்பு சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர்.எங்கள் கட்சியை சேர்ந்த, சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., மாநகராட்சியில் கொரோனா பரிசோதனை செய்த போது, 'பாசிட்டிவ்' என தெரிவித்தனர். அவர் சந்தேகப்பட்டு, தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, 'நெகட்டிவ்' என்று வந்தது. எம்.எல்.ஏ.,வுக்கே சரியான முறையில் பரிசோதனை செய்யப்படவில்லை. தி.மு.க., அரசு நிர்வாக திறமையற்ற அரசு என்பதற்கு, இது உதாரணம்.இவ்வாறு, இ.பி.எஸ்., கூறினார்.


'உறுதிப்பாடு இல்லாதகுழப்பமான உரை'அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம், மீண்டும் கொண்டு வரப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அது குறித்து, கவர்னர் உரையில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பும், கவர்னர் உரையில் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. அத்துடன், தமிழகத்தில் தற்போது அடிக்கடி ஏற்படுகிற மின்வெட்டு, மக்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.பெட்ரோல் லிட்டருக்கு, ஐந்து ரூபாய், டீசல் லிட்டருக்கு நான்கு ரூபாய் குறைக்கப்படும் என, தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அது குறைக்கப்படாது என, நிதி அமைச்சர், கவர்னர் உரைக்கு முன்பே தெளிவுப்படுத்தி விட்டார்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்ந்துள்ளது.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட, முக்கியமான திட்டங்கள், கொள்கைகள், கவர்னர் உரையில் இடம் பெறாததை பார்க்கும் போது, வாக்குறுதிகள் எல்லாம், ஆட்சி கட்டிலில் அமர்வதற்காக அள்ளி வீசப்பட்டவையோ என்ற எண்ணம் மக்கள் இடையே ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில், இது கவர்னர் உரை அல்ல. உறுதிப்பாடு இல்லாத குழப்பமான உரை.இவ்வாறு, அவர் கூறி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8+ 27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
22-ஜூன்-202123:28:23 IST Report Abuse
Mohan ஏமாந்துதான் ஆட்சிய விட்டுட்டீங்களே. அந்த பூனைய மடியிலே கட்டிக்கிட்டு அலையாதீங்க. அதை அவுத்துவிடுங்க. நல்லதே நடக்கும்.
Rate this:
Cancel
P.K.SELVARAJ - Chennai,இந்தியா
22-ஜூன்-202121:22:13 IST Report Abuse
P.K.SELVARAJ போக்குவரத்து தொழிலாளர்களை பழி வாங்கிய நீங்கள் பேச கூடாது. சாதாரண மக்களுக்கு உள்ள இன்சூரன்ஸ் கூட இவர்களுக்கு கிடையாது. 6 வருஷமா DA ஏற்றாமல் வெற்றி நடை போட்ட தமிழகமே? சாதனை சாதனை சாதனை. என்றும் மறக்க மாட்டோம்.
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
22-ஜூன்-202118:08:01 IST Report Abuse
Arachi இனிதான் வரப்போகுது உங்கள் வண்டவாளங்கள். மேஜைக்கு மேல ஊழல் மேஜைக்கு கீழே ஊழல். எம்ஜியார் பாட்டு உங்களுக்கு நன்றாகவே பொருந்துமுங்க. அநியாயம் இந்த நாட்டினில் அநியாயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X