அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு குறித்து 25 ஆயிரம் பேர் மனு

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை:'நீட்' தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அரசின் உயர்மட்ட குழுவுக்கு, 25 ஆயிரம் பேர் கருத்துகளை அனுப்பியுள்ளனர். கருத்துகளை அனுப்ப நாளை கடைசி நாள்.நாடு முழுதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்வு கட்டாயம். இதனால், கிராமப்புற மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆலோசனை
'நீட்' தேர்வு, 25 ஆயிரம் பேர், மனு , கருத்து, நாளை கடைசி

சென்னை:'நீட்' தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அரசின் உயர்மட்ட குழுவுக்கு, 25 ஆயிரம் பேர் கருத்துகளை அனுப்பியுள்ளனர். கருத்துகளை அனுப்ப நாளை கடைசி நாள்.
நாடு முழுதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்வு கட்டாயம். இதனால், கிராமப்புற மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


ஆலோசனை கூட்டம்



எனவே, நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய, தமிழக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதன்பின் நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த பேட்டி:நீட் தேர்வால், எந்தெந்த வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஆவணங்களை திரட்டி வருகிறோம். முக்கியமான ஆவணங்கள் வர வேண்டி உள்ளது.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து, 25 ஆயிரம் பேரிடம் இருந்து கருத்துகள் வந்துள்ளன. பெரும்பாலும், மின்னஞ்சலில் தான் கருத்துகள் வந்து உள்ளன.பெரும்பாலானோர், நீட் தேர்வு வேண்டாம் என்றும், சிலர் நீட் தேர்வு வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.ஒரு சிலர், இரண்டு ஆண்டுகளுக்கு தேர்வு வேண்டாம் என்கின்றனர். அனைத்து தரப்பினரின் கருத்துகளும் வந்த பின், அறிக்கை இறுதி செய்யப்படும்.


அரசாணை



எங்களது குழுவினர், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட பணியாற்றி வருகின்றனர். அரசாணைப்படி, ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அரசின் விதிமுறைகளை தாண்டி, எங்களது பரிந்துரைகள் இருக்காது; விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2016 முதல் படித்த அறிவியல் பிரிவு மாணவர்களின் விபரங்களை சேகரித்து, நீட் தேர்வு ஆய்வு கமிட்டிக்கு அனுப்பும்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து, பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க, நாளை கடைசி நாள். எனவே, கருத்துகளை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல், தபாலிலோ, neetimpact2021@gmail.com என்ற, மின்னஞ்சலிலோ அனுப்பலாம்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
23-ஜூன்-202121:59:18 IST Report Abuse
Swaminathan Chandramouli இந்த குழுவின் நடை முறையே சரியில்லை பொது மக்களைவிட மாணவ , மாணவிகளிடம் இந்த கருத்துகளை எழுத்து பூர்வமாக நீட் வேண்டும் அதற்க்கான காரணங்கள் , நீட் வேண்டாம் அதற்கான காரணங்கள் இவற்றை பெறவேண்டும் . நீட் தேர்வினால் பாதிப்பு என்ற கருத்துக்களை மட்டும் எதற்காக பொது மக்களை தூண்டி விட்டு எழுத சொல்கிறது இந்த குழு
Rate this:
Cancel
DOSS - புதுச்செரி,இந்தியா
23-ஜூன்-202108:33:40 IST Report Abuse
DOSS அடிப்படை சட்டமே தெரியாத தமிழக ஆசாமிகள். 303 எம். பி. க்கள் விருப்பத்தின் பேரில் ஓட்டெடுப்பில் கலந்துகொண்டு நீட்டை ஆதரித்து பாரிமென்ட்டில் தீர்மாணிக்கப்பட்ட திட்டம். அதை னீக்கவேண்டுமானால் ஒரே கட்ச்சியை சேர்ந்த 303எம்.பிக்கள் மீண்டும் ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு வேண்டாம் என்று ஓட்டளித்தால் மட்டுமே அதை நீக்க முடியும், உயர்கல்வி மத்திய அரசிடம் உள்ள நிலையில் ஒன்றும் செய்ய்யமுடியாது. சமூக நீதியும் ஒன்றும் செய்யமுடியாது. படிக்கின்ற பிள்ளைகளை கெடுக்காதீர்கள்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
22-ஜூன்-202121:32:57 IST Report Abuse
r.sundaram அரசு ஒரு குழு அமைத்தால், அது நல்லவர்கள், படித்தவர்கள், விவரம் அறிந்தவர்கள் ஆகியோரது அபிப்ராயம் தெரியும் என்பதால்தான். அந்த குழு பொதுமக்களிடம் அபிப்ராயம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருக்குமானால் அரசே நேரடியாக மாவட்டங் வாரியாக கலெக்ட்டர்கள் மூலமாக அந்த அபிப்ராயங்களை கேட்டு விடலாமே, எதற்கு இந்த குழு. நடப்பது பூராவும் சுத்த பேத்தல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X