அரசியல் செய்தி

தமிழ்நாடு

சபையில் அதிக அளவில் கேள்விகளை எழுப்புங்க: ஸ்டாலின் அறிவுரை

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை : 'அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், சபையில் அதிக அளவில் கேள்விகளை எழுப்ப வேண்டும். அப்போது தான், சிறப்பாக செயல்பட முடியும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.தி.மு.க., ஆட்சி அமைந்த பின், சட்டசபையின் முதல் கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன், நேற்று துவங்கியது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன்,
சபை, அதிக அளவு, கேள்வி,எழுப்புங்க ,ஸ்டாலின்

சென்னை : 'அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், சபையில் அதிக அளவில் கேள்விகளை எழுப்ப வேண்டும். அப்போது தான், சிறப்பாக செயல்பட முடியும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

தி.மு.க., ஆட்சி அமைந்த பின், சட்டசபையின் முதல் கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன், நேற்று துவங்கியது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி மற்றும் எம்,எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:சட்டசபை தேர்தலில், நாம் பெற்று இருப்பது, மாபெரும் வெற்றி அல்ல. அடுத்து வரும் சட்டசபை தேர்தலில், மாபெரும் வெற்றி பெறும் வகையில், இந்த ஐந்தாண்டுகளில், நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.சட்டசபையில், எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு, மூத்த எம்.எல்.ஏ.,க்கள், கவனமுடன் பதிலளிக்க வேண்டும

சபையில் சிறப்பாக செயல்படுவதற்கு, எம்.எல்.ஏ.,க்கள், துறை வாரியாகவும், தொகுதி வாரியாகவும், அனைத்து தரவுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், சபையில் அதிக அளவில் கேள்விகள் எழுப்ப வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயல்பட முடியும்.இவ்வாறு, ஸ்டாலின் பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜூன்-202122:31:20 IST Report Abuse
 rajan வசூல் ராஜா கமல் மாதிரி கேள்வி கேட்டு கினே இருக்கோணம் புரியுதா எதிர்கட்சி மெம்பர்களே.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
22-ஜூன்-202120:59:56 IST Report Abuse
g.s,rajan சரியான பதில் கிடைக்குமா ???சந்தேகமே ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
திலீப் - பொன்னகரம்,இந்தியா
22-ஜூன்-202118:34:36 IST Report Abuse
திலீப் தெரியாமத்தான் இந்தக் கேள்வி. எல்லோரும் கேள்வி மட்டும் கேட்டா, பதில் யார் சொல்லுவாங்க? அதுவும் ஆளும்கட்சியே கேள்வி கேட்டா, பதில் யாரு சொல்லுவாங்க? எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும், ஆளும்கட்சி பதில் சொல்லும். இதுதான் பலகாலமாக நடைமுறையில் உள்ளது. (ஒருவேளை செய்தியை தப்பா குடுத்துட்டாங்களா?). ஒண்ணும் பிரீலபா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X