அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக நிதி நிலையை சீர் செய்ய புது கமிட்டி!

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (146)
Share
Advertisement
தமிழக அரசின் நிதி நிலைமையை சீர் செய்ய, புதிய கமிட்டி அமைக்கப்பட உள்ளது. ஐந்து வல்லுனர்கள் அடங்கிய குழு, முதல்வருக்கு தேவையான பொருளாதார ஆலோசனைகளை வழங்கும் என்றும், அதையொட்டி அரசின் பொருளாதார கொள்கைகள் வகுக்கப்படும் என்றும், சட்டசபையில் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார். பெருந்தொற்றால், கடுமையான பொருளாதார பிரச்னையை, தமிழக அரசு சந்தித்து வருகிறது.
தமிழக நிதி நிலை, சீர் செய், புது கமிட்டி!

தமிழக அரசின் நிதி நிலைமையை சீர் செய்ய, புதிய கமிட்டி அமைக்கப்பட உள்ளது. ஐந்து வல்லுனர்கள் அடங்கிய குழு, முதல்வருக்கு தேவையான பொருளாதார ஆலோசனைகளை வழங்கும் என்றும், அதையொட்டி அரசின் பொருளாதார கொள்கைகள் வகுக்கப்படும் என்றும், சட்டசபையில் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார்.

பெருந்தொற்றால், கடுமையான பொருளாதார பிரச்னையை, தமிழக அரசு சந்தித்து வருகிறது. தமிழக அரசின் நிதி நிலைமை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. நிதிப் பற்றாக்குறையும், கடன் சுமையும் அதிகம். அதே சமயம், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக உள்ளன.பொருளாதார ஆலோசனைக் குழுபுதிய முயற்சிகள், திட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவைகளின் வாயிலாக, விரைந்து பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் சமத்துவத்தை வழங்க வேண்டும் என்று அரசிடம் மக்கள் விரும்புகின்றனர். இந்நிலையில், இந்திய மற்றும் சர்வதேசப் பொருளாதார போக்குகளைப் புரிந்தவர்களின் தமிழகத்தையும், அதன் பொருளாதார, சமூக, அரசியலையும், நன்கு அறிந்த மிகச் சிறந்த பொருளாதார அறிஞர்களின் தேர்ந்த ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. அதனால், 'முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு' அமைக்கப்படுவதாக, தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். அவர் தான் இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றப் போகிறார்.கிருஷ்ணனே, பொருளாதார துறையில் மிகத் திறமையானவர்; 30 ஆண்டுகளாக ஆட்சிப் பணி அனுபவம் மிக்கவர். டில்லி பல்கலையின், செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லுாரியில் இளங்கலையும், முதுகலை பொருளாதாரத்தை அண்ணாமலைப் பல்கலையிலும் முடித்தவர். 1989 'பேட்ச்' ஐ.ஏ.எஸ்., அதிகாரி இவர்.


உலகின் தலைசிறந்த ஒருவர்கடந்த 2004 முதல் 2007 வரை, மத்திய நிதி அமைச்சரின் தனிச் செயலராக இருந்த கிருஷ்ணன், 2007 முதல் 2010 காலக்கட்டத்தில், வாஷிங்டனில் உள்ள சர்வதேச
நிதியத்திலும் பணியாற்றினார். அதன் பின், வணிக வரித்துறை ஆணையராகவும், செலவினங்களுக்கான முதன்மை செயலராகவும் இருந்துள்ளார். ஐந்தாவது மாநில நிதிக் குழுவின் தலைவராகவும், தமிழ்நாடு வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்தவர்.
இக்குழுவின் உறுப்பினர்களில், பிரபலமான மேலும் ஐவரும் உள்ளனர்.


* ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன்:

தொடர்ச்சியாக இந்தியாவை பற்றி, பல்வேறு பேட்டிகளில் பேசியும், கட்டுரைகள் எழுதியும் வருபவர். சிகாகோ பல்கலையில், 'பூத் ஸ்கூல் ஆப் பிசினஸ்' பேராசிரியர்.

கடந்த 2007 - -08ம் ஆண்டுகளில், சர்வதேச அளவில் பொருளாதாரத் தேக்கம் ஏற்படும் என்று கணித்த ராஜன், சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'டைம்' இதழில் 2016ம் ஆண்டின் உலகின் தலைசிறந்த 100 பேரில் ஒருவராகத் தேர்வு பெற்றவர்.


* அரவிந்த் சுப்பிரமணியன்:

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராகச் செயல்பட்டவர். வங்கித் துறையில் ஏற்பட்ட 'டுவின் பேலன்ஸ் ஷீட்' சிக்கலை கண்டுபிடித்து சொன்ன சுப்பிரமணியன் தான், 'ஜன் தன் கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் போன் எண் ஆகிய மூன்றையும் இணைக்க வேண்டும்' என்ற கருத்தை முதலில் சொன்னவர்.அதன்வாயிலாக, மக்களுடைய தகவல்களை ஒருங்கிணைக்க முடியும் என்பது இவரது கருத்து


* டாக்டர் எஸ். நாராயண்:

மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர். 40 ஆண்டுகளாக, அரசுத் துறையில் பணியாற்றியவர். மத்திய அரசின், பல்வேறு வரிச் சீர்திருத்தங்களையும், பொருளாதார கொள்கைகளையும் வகுத்தவர். 2000 - 2004 வரை, மத்திய பட்ஜெட்டை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தவர்.
* சர்வதேச அளவில் புகழ் பெற்றவர்களில் முதன்மையானவர், எஸ்தர் டப்ல

அமெரிக்காவைச் சேர்ந்த 2019ம் ஆண்டுக்கான 'நோபல்' பரிசுப் பெற்ற பொருளாதார அறிஞர்களில் ஒருவர். இவரது கணவர் தான் அபிஜித் பானர்ஜி. அவரும் நோபல் பரிசு பெற்றவர்.

ஏழ்மை ஒழிப்பை, பல்வேறு திட்டங்கள் வாயிலாக, எப்படி சாத்தியப்படுத்த முடியும் என்று, இவர்கள் செய்த ஆய்வுக்காகவே, இவ்விருவருக்கும் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.* ஜீன் டிரெஸ்:இந்தியாவில் உள்ள மற்றொரு புகழ் பெற்ற பொருளாதார அறிஞர். வளர்ச்சிப் பொருளாதாரம் என்று சொல்லப்படும் துறையில் ஆய்வாளர். நோபல் அறிஞர் அமர்த்தியா சென், இவருடன் இணைந்து புத்தகம் எழுதியுள்ளார். இவர் சமூக ரீதியான ஆய்வுகளுக்காக புகழ் பெற்றவர்.

இந்த ஐவரும் இணைந்து தான், தமிழக பொருளாதாரத்தை உயர்த்த ஆலோசனைகளை, தமிழக முதல்வருக்கு வழங்கப் போகின்றனர்.

இவர்களது நியமனத்துக்கு பின்னேயுள்ள முக்கியத்துவம் குறித்து, பொருளாதாரத் துறை நிபுணர்கள் கூறியதாவது: சர்வதேச அளவில் புகழ் பெற்ற இவர்களது அனுபவம், தமிழகத்திற்கு பயன்படப் போவது, எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தமிழகத்தின் பெருமை, உலக அளவில் கவனம் பெறுவதும், இங்கே கவனிக்கத்தக்கது.இவர்கள் எல்லாரும், தமிழக அரசின் பொருளாதார குழுவில் இடம்பெற ஒப்புக் கொண்டதே, மிகப்பெரிய விஷயம்.

பதவியோ, பணமோ பெரிதென்று நம்பாத இவர்கள், பல சமயங்களில், முக்கிய பதவிகளையே துாக்கி எறிந்து வெளியேறியவர்கள். தங்கள் கொள்கைகளிலும், கருத்துகளிலும் துாண் போல் நிலைத்து நிற்பவர்கள்.இவர்கள் அனைவரையும், தமிழக வளர்ச்சிக்கு ஆலோசகர்களாக கொண்டு வரும்போது, தமிழக அரசின் பொறுப்பும் உயர்கிறது. அவர்கள் காட்டும் வழியையும், ஆலோசனைகளையும் பின்பற்றியே ஆக வேண்டும். அப்படி நடந்தால் தான், அவர்களுக்கும் கவுரவம், மரியாதை.

இன்னொரு விஷயம் முக்கியம், இவர்கள் அனைவரும், உலக அளவில் உள்ள பல்வேறு நிதி அமைப்புகளோடும், அறக்கட்டளைகளோடும் தொடர்பு உடையவர்கள் என்பதே.
தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஆதாரங்களைத் தேடிப் போகும்போது, இவர்களுடைய பெயர்களே, அங்கே கைதுாக்கி விடும். தமிழகத்துக்குத் தற்போது தேவை, புதிய பொருளாதார சிந்தனை, கொள்கை, கோட்பாடு. அந்தத் திசையில் மிகச் சரியாக, தமிழக அரசு அடியெடுத்து வைத்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (146)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
23-ஜூன்-202104:25:41 IST Report Abuse
Sathyanarayanan Subramanian விஞ்ஞான முறையில் யோசித்தால் ஊழலுக்கு வழி வகுக்கும்
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
23-ஜூன்-202104:24:27 IST Report Abuse
Sathyanarayanan Subramanian நிதி அமைச்சர் மெத்த படித்த மேதாவி அவருக்கு இது ஒரு பெருத்த அவமானம்.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
23-ஜூன்-202100:09:03 IST Report Abuse
unmaitamil இந்த வெள்ளை யானைகளுக்கு செலவு செய்யும் பணத்தைக்கொண்டு, ஒரு புதிய அரசாங்க ஆஸ்பத்திரி கட்டலாம். நிதி நிலை முன்னேற, எல்லா இலவசங்களையும் நிறுத்தி, மத்திய அரசுபோல் ஊழல் இல்லா ஆட்சி செய்தால் போதும். கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், எப்படி வானம் ஏறி வைகுண்டம் போவான் ??? கதைபோல்தான் இதுவும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X