எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

விவசாயம்: தமிழக அரசின் 'செல்லக் குழந்தை!'

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தி.மு.க., அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில், கவர்னர் உரையில், 'இந்த ஆண்டு முதல், விவசாயத்துக்காக தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும்' என்ற அறிவிப்பு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில், 'விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடப்படும்' என்று உறுதிமொழி கொடுத்துஇருந்தது.கடன் சுமை'விவசாய துறைக்கு ஏன் தனி பட்ஜெட் வெளியிட
விவசாயம்: தமிழக அரசின் 'செல்லக் குழந்தை!'

தி.மு.க., அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில், கவர்னர் உரையில், 'இந்த ஆண்டு முதல், விவசாயத்துக்காக தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும்' என்ற அறிவிப்பு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில், 'விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடப்படும்' என்று உறுதிமொழி கொடுத்துஇருந்தது.


கடன் சுமை'விவசாய துறைக்கு ஏன் தனி பட்ஜெட் வெளியிட வேண்டும்' என்ற கேள்வி எழுவது இயல்பு. விவசாயிகளுக்கும், விவசாயத்துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்க, தனி பட்ஜெட்டே தீர்வாக அமையும் என்கின்றனர், இத்துறை வல்லுனர்கள். துறை வல்லுனர்கள் கூறியதாவது:
கடந்த 2011- - 12ல், கர்நாடக மாநிலமும் 2012 - -13ல், ஒடிசா மாநிலமும், தனி விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யும் பழக்கத்தை ஆரம்பித்தன. கர்நாடகாவில், பொது பட்ஜெட் இருந்தபோது, விவசாயிகளுக்கு 4 முதல் 6 சதவீத வட்டியில் கடன் கொடுக்கப்பட்டு வந்தது. தனி பட்ஜெட் போட துவங்கிய பின், அவர்களுக்கு 1 சதவீத வட்டியில் கடன் கிடைத்தது.

அதாவது, அந்த காலக்கட்டத்தில், கர்நாடக மாநிலத்தில் வேளாண்மை பொய்த்து போய், கடன்சுமை அதிகமானது. அதனால், விவசாயிகளின் தற்கொலைகள் அதிகமாயின. இந்த நிலைமையை சமாளிக்க, விவசாயத்துக்குக் கூடுதல் கவனம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடும் பழக்கம், அங்கு தொடங்கியது. தனி பட்ஜெட், ஒடிசாவிலும் பல்வேறு பலன்களைக் கொடுத்தன.


தனி பட்ஜெட் - என்ன பலன்?பல்வேறு விவசாய பயிர்களின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்து, அதை அடைவதற்கான வழிமுறைகளை திட்டமிட முடியும். விவசாயத்தின் பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை, முறையாக செலவிட முடியும். உரிய பலன் கிடைக்கிறதா என்பதையும் கண்காணிக்க முடியும். விவசாயிகளுக்கு தேவைப்படும், கடன் தொகையை அதிகப்படுத்த முடியும்; வட்டி விகிதத்தையும் மாற்றியமைக்க முடியும்; அவர்களுக் கான சந்தை வாய்ப்புகளையும் மேம்படுத்த முடியும். விவசாயம் சார்ந்த துணைத் தொழில்களான கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்றவற்றிலும் கவனம் செலுத்தலாம். விவசாய உற்பத்திகளை சேமிப்பதற்கான கிடங்குகள், குளிர்பதன வசதிகள் ஆகியவற்றை அதிகப்படுத்தலாம்.

இவையெல்லாம், இப்போது நடைபெறவில்லையா என்ற கேள்வி எழலாம். நடைபெறுகிறது; ஆனால், ஒரு விலகல் தன்மையோடு, பெருமளவு பொறுப்புகள் ஏற்கப்படாமல் நடைபெறுகிறது.தனி பட்ஜெட் என்பது, பொறுப்பை தோள்மீது சுமப்பதற்கான முகாந்திரம். கண்ணைக் காக்கும் இமை போல், விவசாயத்தைக் காப்பேன் என்று, அரசு கொடுக்கும் உறுதிமொழி. இதன் சுக, துக்கங்கள், இனி தன்னுடையவை என்று சொல்வதைப் போன்றது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், இனிமேல் விவசாயம், தமிழக அரசின், 'செல்லக் குழந்தை'யாகவே பார்க்கப் படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தனி பட்ஜெட்: விவசாயிகள் வரவேற்புவிருத்தகிரி, தேசிய தலைவர், இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு:

நீண்ட காலமாக, மத்திய, மாநில அரசுகளிடம், இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். தற்போது, தமிழக அரசு ஏற்றுள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியது போல, நெல், கரும்பு உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவோம் என்று கூறாமல், முதல் பட்ஜெட்டிலேயே அறிவிக்க வேண்டும்.


நல்லசாமி, செயலர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு:வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நாட்டில், 60 சதவீத மக்கள், விவசாயத்தை சார்ந்து உள்ளனர். ஆனால், பட்ஜெட்டில், வேளாண் துறைக்கு, 2.50 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தனி பட்ஜெட் போட்டால், வேளாண் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என, தெரிய வரும். தனி பட்ஜெட்டில், பல்வேறு புதிய வேளாண் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.


விஸ்வநாதன், தலைவர், ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம்:'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போடப்படும்' என்ற வாக்குறுதியை, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சொன்னபடியே, வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.இன்றைய சூழ்நிலையில், உற்பத்தி செய்த பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. பல விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வேண்டும். இதற்கென, வேளாண் திட்டங்களை வரைவு செய்வதற்கு தனிக் குழு அமைக்க வேண்டும். இதில், அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் மட்டுமின்றி, விவசாயிகளும் உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும். இந்த குழு பரிந்துரைகளை ஏற்று, அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். -- நமது நிருபர் - -

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
22-ஜூன்-202115:06:11 IST Report Abuse
S.Baliah Seer கூட்டு பண்ணை முறையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய /மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
22-ஜூன்-202113:45:52 IST Report Abuse
duruvasar விவசாய நிலங்களின் நடுவில் காங்கிரீட் நடைபாதை அமைக்கக் கூடாது என சட்டம் கொண்டுவரனும்
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
22-ஜூன்-202107:13:43 IST Report Abuse
Elango நல்லது.... வேளான்மை துறை நிதி ஒதுக்கீடு அதிகமாக்க வேண்டும். சொட்டு நீர் பாசனத்தை பரவலாக்க வேண்டும்.... Allied industries வளர்ச்சி பெருவது ஒன்றே விவசாயம் லாபகரமாக இயங்க வழி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X