பந்தோபாத்யாய்க்கு எதிராக நடவடிக்கை

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி :மேற்கு வங்க முன்னாள் தலைமை செயலர் அலபன் பந்தோபாத்யாய்க்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கையை மத்திய அரசு துவங்கி உள்ளது. மேற்கு வங்கத்தில் சமீபத்தில், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யச் சென்ற பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். அவருடன் சேர்ந்து, மாநிலத் தலைமைச் செயலராக இருந்த அலபன் பந்தோபாத்யாயும்
பந்தோபாத்யாய், எதிராக நடவடிக்கை

புதுடில்லி :மேற்கு வங்க முன்னாள் தலைமை செயலர் அலபன் பந்தோபாத்யாய்க்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கையை மத்திய அரசு துவங்கி உள்ளது.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யச் சென்ற பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். அவருடன் சேர்ந்து, மாநிலத் தலைமைச் செயலராக இருந்த அலபன் பந்தோபாத்யாயும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மத்திய அரசு பணிக்கு திரும்பும்படி, பந்தோபாத்யாய்க்கு மத்திய அரசு உத்தரவிட்டது.


latest tamil news


எனினும், பணியில் இருந்து ஓய்வுபெற்ற அவர், மேற்கு வங்க முதல்வரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை மத்திய அரசு துவங்கி உள்ளது.
இது தொடர்பாக அவருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி வைக்கப்படுள்ளது.
அடுத்த, 30 நாட்களுக்குள், இதுகுறித்து பதில் அளிக்க, அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு அதிகப்படி தண்டனையாக அபராதம் விதிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
22-ஜூன்-202113:28:31 IST Report Abuse
Lawrence Ron பாலி வாங்க பயன்படும் சட்டம் நடவடிக்கை அரசு கவனம் செலுத்தவேண்டிய இடம் மக்கள் பார்வைக்கு
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
22-ஜூன்-202112:13:48 IST Report Abuse
Dhurvesh ஒரு IAS மீது என்ன வழக்கு போட்டாலும் இங்கே பேசிக்கொள்ள கார சாரமா இருக்கும் அனால் கோர்ட்டில் இந்த வழக்கு ஒரு second நிற்காது
Rate this:
Cancel
S.PALANISAMY - COIMBATORE,இந்தியா
22-ஜூன்-202111:54:24 IST Report Abuse
S.PALANISAMY நாயர் பிடித்த புலி வால் தான் ஒன்றிய அரசுக்கு. எல்லம்மன் அவர்கள் விரிவாக எழுதியுள்ளார்கள். மீண்டும் முக்குடைப்பு தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X