பந்தோபாத்யாய்க்கு எதிராக நடவடிக்கை | Dinamalar

பந்தோபாத்யாய்க்கு எதிராக நடவடிக்கை

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (9)
Share
புதுடில்லி :மேற்கு வங்க முன்னாள் தலைமை செயலர் அலபன் பந்தோபாத்யாய்க்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கையை மத்திய அரசு துவங்கி உள்ளது. மேற்கு வங்கத்தில் சமீபத்தில், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யச் சென்ற பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். அவருடன் சேர்ந்து, மாநிலத் தலைமைச் செயலராக இருந்த அலபன் பந்தோபாத்யாயும்
பந்தோபாத்யாய், எதிராக நடவடிக்கை

புதுடில்லி :மேற்கு வங்க முன்னாள் தலைமை செயலர் அலபன் பந்தோபாத்யாய்க்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கையை மத்திய அரசு துவங்கி உள்ளது.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யச் சென்ற பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். அவருடன் சேர்ந்து, மாநிலத் தலைமைச் செயலராக இருந்த அலபன் பந்தோபாத்யாயும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மத்திய அரசு பணிக்கு திரும்பும்படி, பந்தோபாத்யாய்க்கு மத்திய அரசு உத்தரவிட்டது.


latest tamil news


எனினும், பணியில் இருந்து ஓய்வுபெற்ற அவர், மேற்கு வங்க முதல்வரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை மத்திய அரசு துவங்கி உள்ளது.
இது தொடர்பாக அவருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி வைக்கப்படுள்ளது.
அடுத்த, 30 நாட்களுக்குள், இதுகுறித்து பதில் அளிக்க, அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு அதிகப்படி தண்டனையாக அபராதம் விதிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X