தடுப்பூசி போடும் பணியின் வேகத்தை அதிகரிக்க முடிவு| Dinamalar

தடுப்பூசி போடும் பணியின் வேகத்தை அதிகரிக்க முடிவு

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (5)
Share
ஆமதாபாத் :''வரும் ஜூலை - ஆகஸ்ட் மாதம் முதல், கொரோனா தடுப்பூசி போடும் பணியின் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்தார்.குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள தடுப்பூசி மையத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர்
தடுப்பூசி , பணியின் வேகம்,அதிகரிக்க முடிவு

ஆமதாபாத் :''வரும் ஜூலை - ஆகஸ்ட் மாதம் முதல், கொரோனா தடுப்பூசி போடும் பணியின் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்தார்.குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள தடுப்பூசி மையத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா நேற்று ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:கொரோனாவுக்கு எதிரான போரில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய பயணம் துவங்கி உள்ளது. நாடு முழுதும் உள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.இந்தியாவை போன்ற மக்கள்தொகை உடைய நாட்டில், இலவசமாக தடுப்பூசி வழங்குவது மிகப்பெரிய முடிவு.


latest tamil news



சர்வதேச யோகா தினத்தில் இந்த மிகப்பெரிய திட்டம் நாடு முழுதும் வேகம் எடுத்துள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கு விரைவில் சாத்தியமாகும்.

ஜூலை - ஆகஸ்ட் மாதம் முதல், தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X