நேபாளத்தில் தோன்றியது யோகா ; பிரதமர் சர்மா ஒலி சர்ச்சை பேச்சு

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
காத்மாண்டு : ''யோகா என்ற கலை நேபாளத்தில் உருவானது. அந்தக் கலை உருவானபோது, இந்தியா ஒரு நாடாகவே இல்லை,'' என, நம் அண்டை நாடான நேபாளத்தின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.'ஹிந்துக் கடவுள் ராமர், நேபாளத்தில் பிறந்தவர்; விசுவாமித்திரர் போன்ற முனிவர்களும் நேபாளத்தில் பிறந்தவர்கள்' என, ஏற்கனவே சர்ச்சையை எழுப்பியுள்ளார் நேபாள பிரதமர் சர்மா

காத்மாண்டு : ''யோகா என்ற கலை நேபாளத்தில் உருவானது. அந்தக் கலை உருவானபோது, இந்தியா ஒரு நாடாகவே இல்லை,'' என, நம் அண்டை நாடான நேபாளத்தின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.



latest tamil news



'ஹிந்துக் கடவுள் ராமர், நேபாளத்தில் பிறந்தவர்; விசுவாமித்திரர் போன்ற முனிவர்களும் நேபாளத்தில் பிறந்தவர்கள்' என, ஏற்கனவே சர்ச்சையை எழுப்பியுள்ளார் நேபாள பிரதமர் சர்மா ஒலி.இந்நிலையில், காத்மாண்டுவில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் சர்மா ஒலி பேசியதாவது:யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல. யோகா கண்டுபிடிக்கப் பட்டபோது, இந்தியா ஒரு நாடாகவே இல்லை; பல ராஜ்ஜியங்களாக இருந்தது.நேபாளத்தில் தான் யோகா உருவானது.


latest tamil news


அதை சர்வதேச அரங்கில் முன்னிறுத்த நாம் தவறிவிட்டோம். ஆனால் இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி அதற்கு உரிமை கோரி, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று விட்டார்.நம் நாட்டைச் சேர்ந்த முனிவர்கள், யோகிகள் குறித்தும் உலகுக்கு தெரிவிக்க தவறிவிட்டோம். நேபாளத்தில் உள்ள அயோத்தியாபுரியில் தான், ராமர் பிறந்தார். சீதாவும் நேபாளத்தின் தேவ்கட் பகுதியில் பிறந்தவர். முனிவர் வால்மீகியும் இங்கு தான் பிறந்தார். ஆனால் இந்த வரலாறு திருத்தப்பட்டுவிட்டது. அதை சரி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
22-ஜூன்-202114:27:36 IST Report Abuse
pradeesh parthasarathy என்ன டா ..... இவன் நம்ம ஜி யையே வாய்ச்சவ்டால மிஞ்சி விடுவான் போலிருக்கே ....
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
22-ஜூன்-202113:59:38 IST Report Abuse
Vena Suna பொய் சொல்வதில் இவன் திராவிட கட்சிகளை மிஞ்சி விடுவான் போல் இருக்கிறது.இவன் சீன நாடு சொற்படி நடக்கிறான்
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
22-ஜூன்-202112:48:48 IST Report Abuse
radha அய்யா யோகா கண்டு பிடிச்சதே எங்க மோடி அய்யாதான் தெரியுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X