அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : சசிகலாவின் 'பாச்சா' பலிக்காது!

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (68)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஆர்.இரபீந்த், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க.,வை கைப்பற்ற வேண்டும் என, சசிகலா பகிரங்கமாகவே திட்டம் தீட்டி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்த போது, சசிகலா மறைமுகமாக ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தார். அவரின் மறைவுக்கு பின், அப்போதைய ஆட்சியையும்,

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ஆர்.இரபீந்த், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க.,வை கைப்பற்ற வேண்டும் என, சசிகலா பகிரங்கமாகவே திட்டம் தீட்டி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்த போது, சசிகலா மறைமுகமாக ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தார். அவரின் மறைவுக்கு பின், அப்போதைய ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற திட்டமிட்டார். ஆனால், அவர் நினைத்தது போல நடக்கவில்லை. சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. அதை பயன்படுத்தி, கட்சியை வளைத்து விடலாம் என, 'கணக்கு' போட்டு, அ.தி.மு.க.,வில் உள்ள அதிருப்தியாளர்களிடம் போனில் பேசி வருகிறார். அந்த 'ஆடியோ'வை வெளியிட்டு, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.latest tamil news'ஆட்சியை தான் பிடிக்க முடியவில்லை; கட்சியையாவது கைப்பற்றி விட வேண்டும்' என, சசிகலா தரப்பு 'ரூம்' போட்டு திட்டம் தீட்டி வருகிறது. நெஞ்சுருக பேசுவதால், அ.தி.மு.க., வில் இருக்கும் பலர், தன்னிடம் சரணாகதி அடைந்து விடுவர் என, அவர் நினைக்கிறார். அதற்காக தான், 'போன் ஆடியோ' நாடகம். என்ன திட்டம் போட்டாலும், நாடகம் நடத்தினாலும், சசிகலா நினைப்பது எதுவும் நடக்காது.


latest tamil newsஅ.தி.மு.க.,வில் இருந்து விலகி இருப்பது தான், அவருக்கு நல்லது. சசிகலாவிற்காக உருவான அ.ம.மு.க,வில் இணைந்து, கட்சியை வழிநடத்தி, ஆட்சியை பிடிக்கலாம். அதை விடுத்து, அ.தி.மு.க.,வில் குழப்பத்தை ஏற்படுத்துவது, ஜெ., மரணத்துடன் இணைந்து சந்தேகத்தை ஏற்படுத்தும்.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
22-ஜூன்-202121:58:36 IST Report Abuse
bal பணம் பத்தும் செய்யும் பாருங்கள்..ஒரு குவாட்டருக்கோ பொய் பேசுவதற்கோ பிராணிக்கோ துட்டுக்கோ வோட்டு போட்ட தமிழர்கள்...இதற்கும் உதவுவார்கள்...பாவம் சின்னம்மா..அதுவும் சென்னையில் பாதி பேர் வோட்டை போடவேயில்லை சுகவாசிகள்.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
22-ஜூன்-202121:54:15 IST Report Abuse
BASKAR TETCHANA இப்போதைய சூழலில் காசு கொடுத்து வோட்டு வாங்கி வெற்றியும் பெற்று ஆட்சியையும் பிடித்தது தி.மு.க. அது போல் சிலது காசுக்கு ஆசைப்பட்டு என்னமோ அம்மாவிடம் பேசிவிட்டு மாதிரி பொய்யும் புரட்டும் சொல்லி கொண்டு அம்மா அம்மா என்று கதறுகின்ற ஜென்மங்கள் நாளைக்கு திரும்பி தான் வர வேண்டும். அப்போது பார்க்கலாம்.
Rate this:
Cancel
padmanabhan - coimabatore,இந்தியா
22-ஜூன்-202121:40:16 IST Report Abuse
padmanabhan if people keep on criticize her surely one day she will get her goals. And no one is gold in politics.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X