சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. மாணவி தற்கொலை; வாலிபர் கைதுகோவை:கோவை, சிங்காநல்லூரை சேர்ந்த, 19 வயது மாணவி தனியார் கல்லுரியில் படித்து வந்தார். இவருடன் கேசவ் குமார், 24 என்பவர் நட்பாக பழக துவங்கி காதலித்தார்.இதை பயன்படுத்தி மாணவியிடம் இருந்து நகை, பணத்தை பெற்று வந்தார்.ஒரு கட்டத்தில் மாணவி பணம் தருவதை நிறுத்தியதால், ஆத்திரமடைந்த வாலிபர், இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களை வைத்து

தமிழக நிகழ்வுகள்
1. மாணவி தற்கொலை; வாலிபர் கைது
கோவை:கோவை, சிங்காநல்லூரை சேர்ந்த, 19 வயது மாணவி தனியார் கல்லுரியில் படித்து வந்தார். இவருடன் கேசவ் குமார், 24 என்பவர் நட்பாக பழக துவங்கி காதலித்தார்.

இதை பயன்படுத்தி மாணவியிடம் இருந்து நகை, பணத்தை பெற்று வந்தார்.ஒரு கட்டத்தில் மாணவி பணம் தருவதை நிறுத்தியதால், ஆத்திரமடைந்த வாலிபர், இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களை வைத்து ஆபாசமாக சித்தரித்து வெளியிட போவதாக மிரட்டினார். இதற்கு அந்த வாலிபரின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.இதையறிந்த மாணவி விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.சிங்காநல்லுார் போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலைக்கு தூண்டியதாக கேசவ் குமார், அவரது தாய் மங்கையகரசி, 46 ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.latest tamil news2. பலாத்காரத்துக்கு முயன்ற தந்தை கொலை: மகள் கைது
திருவண்ணாமலை : பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கொலை செய்த மகளை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 40 வயதுள்ள தெருக்கூத்து கலைஞருக்கு மனைவியும், 16 மற்றும் 19 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று காலை, 10:00 மணிக்கு மனைவியும், இளைய மகளும் திருவண்ணாமலைக்கு சென்றிருந்தனர். மூத்த மகள் மட்டும் வீட்டில் இருந்தார். பிற்பகல், 12:00 மணிக்கு, குடிபோதை யில் வந்த தந்தை, மூத்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சியடைந்த மகள், தன்னை காப்பாற்றிக் கொள்ள அம்மிக்கல்லால் தலையில் அடித்ததில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். கீழ்பென்னாத்துார் போலீசார் பெண்ணை கைது செய்தனர்.


latest tamil news
3. கனரா வங்கியில் கொள்ளை முயற்சி
ஓசூர், : ஓசூரில், கனரா வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் மர்மநபர் ஈடுபட்டார். அலாரம் ஒலித்ததால் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, 1 லட்சம் ரூபாய் தப்பின.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், நேதாஜி சாலை சந்திப்பில், ஈஸ்வரி காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் கனரா வங்கி செயல்படுகிறது.

கடந்த 19 இரவு 9:15 மணிக்கு, இரும்பு கம்பி யுடன் வங்கிக்கு வந்த மர்மநபர், அங்கிருந்த இரு 'சிசிடிவி' கேமராக்களை உடைத்தார். தொடர்ந்து, வங்கியின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயற்சித்தார். பூட்டை உடைத்தபோது வங்கியின் அலாரம் ஒலித்ததால் மர்மநபர் தப்பிச் சென்றார். இதனால், வங்கியில் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 1 லட்சம் ரூபாய் தப்பின.இது தொடர்பாக வங்கி மேலாளர் கிருஷ்ணமோகன், 58, ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி முன்பிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, விசாரித்து வருகின்றனர்.


latest tamil newsகடந்த ஜன., 22ல், ஓசூர், பாகலுார் சாலையில் உள்ள முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்தில், துப்பாக்கியுடன் நுழைந்த வட மாநில கொள்ளை கும்பல், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்க நகையை கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுடன் தொடர்பில் உள்ளவர், கனரா வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

4. சூதாடியவர்களிடம் 'வசூல்' :சிறப்பு எஸ்.ஐ., சஸ்பெண்ட்
கோவை : கோவை மாவட்டம், பொள்ளாச்சி நெகமம் அருகே உள்ள மெட்டுவாவி பகுதியில் கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அங்கு சென்ற சிறப்பு எஸ்.ஐ., ஏசு பாலன் சூதாட்டம் நடப்பதை உறுதி செய்தார். தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியாமல் இருக்க அவர்களிடம், ரூ.7,000 பணம் பெற்றுள்ளார்.

இது குறித்து எஸ்.பி.,யிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.எஸ்.பி., உத்தரவையடுத்து, நெகமம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் விசாரித்தார். இதில், ஏசு பாலன் பணம் பெற்றது உறுதியானது. இதையடுத்து, ரூரல் எஸ்.பி., செல்வநாகரத்தினம், எஸ்.எஸ்.ஐ., ஏசுபாலனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

5. ரூ. 60 லட்சம் மோசடி செய்தவர் கைது
சூலுார் : ரூ.60 லட்சம் மதிப்புள்ள இயந்திரங்களை திருடி விற்ற மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் உசேப்பா, 26. சூலூர் அடுத்த பொத்தியாம்பாளையத்தில் வீட்டு உபயோகத்துக்கு பயன்படும் காப்பர் ஒயர் உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது உறவினர் உஷப்பா, 31, மேலாளராகவும், ரவிக்குமார், 32, அக்கவுண்ட்ஸ் மேலாளராகவும் இருந்து வந்தனர்.கடந்த ஓராண்டாக கம்பெனி செயல்படவில்லை. இயந்திரங்களை விற்க உரிமையாளர் முடிவு செய்திருந்தார். இந்நிலையில், உசேப்பாவுக்கு தெரியாமல், ரூ.60 லட்சம் மதிப்புள்ள இயந்திரங்களை உஷப்பாவும், ரவிக்குமாரும் விற்று மோசடி செய்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சூலுார் இன்ஸ்பெக்டர் முருகேசன், மேலாளர் உஷப்பாவை கைது செய்தார். ரவிக்குமாரை தேடி வருகின்றனர்.


latest tamil newsஇந்தியாவில் குற்றம் :
பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், லஷ்கர் - இ - தொய்பாவின் முக்கிய நபரான முடாசிர் பண்டிட், பாக்., பயங்கரவாதி உட்பட மூவர் கொல்லப்பட்டனர். இவர்கள் ஏற்கனவே பா.ஜ., கவுன்சிலர்கள், ஒரு போலீஸ்காரர் உள்ளிட்டோரை கொலை செய்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.


latest tamil news
உலக நடப்பு
அமெரிக்க எல்லையில் துப்பாக்கிச்சூடு
வாஷிங்டன் : மெக்சிகோ மற்றும் அமெரிக்க எல்லை அருகே அமைந்துள்ள ரெய்னோசா நகரில், வாகனத்தில் வந்த ஒரு கும்பல், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், வன்முறை கும்பலை சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர். அகதிகள், அமெரிக் காவுக்குள் நுழைய முயற்சிக்கும் இடமாக ரெய்னோசா நகரம் திகழ்வதால், அடிக்கடி இங்கு இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X