உ.பி.,யில் கட்டாய மத மாற்றம் பாக்., உளவாளிகள் கைது

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
லக்னோ : வாய் பேச மற்றும் காது கேட்க இயலாதவர்களை கட்டாய மத மாற்றம் செய்ய முயற்சித்த, பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை, உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., அரசு நடக்கிறது. இங்குள்ள நொய்டாவில் வசிப்பவர்கள் உமர் கவுதம், ஜஹாங்கீர். வாய் பேச மற்றும் காது கேட்க இயலாத மாற்றுத் திறனாளியான பெண் மற்றும்

லக்னோ : வாய் பேச மற்றும் காது கேட்க இயலாதவர்களை கட்டாய மத மாற்றம் செய்ய முயற்சித்த, பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை, உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர்.latest tamil newsஉ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., அரசு நடக்கிறது. இங்குள்ள நொய்டாவில் வசிப்பவர்கள் உமர் கவுதம், ஜஹாங்கீர். வாய் பேச மற்றும் காது கேட்க இயலாத மாற்றுத் திறனாளியான பெண் மற்றும் சிறுமியை கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்துக்கு இவர்கள் மாற்ற முயற்சித்தனர்.பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள். இதுவரை, 1,000 பேரை கட்டாய மத மாற்றம் செய்துள்ளனர்.


latest tamil newsஇதற்காகவே, நொய்டா ஜாமியா நகரில், 'இஸ்லாமிய தாவா சென்டர்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இங்கு தான், பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்யும் பணி நடக்கிறது. பணம், வேலைவாய்ப்பு, திருமணம் ஆகியவற்றை காரணமாக வைத்து, ஏராளமானோரை மதம் மாற்றும் பணி நொய்டாவில் நடந்து வருகிறது. ஒரு பெரும் கும்பல் இந்த வேலையை செய்து வருகிறது. அவர்களை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
22-ஜூன்-202113:26:33 IST Report Abuse
Raj தேர்தல் நெருங்கி விட்டது, வேறு எதை சொல்லியும் மக்களை துண்டமுடியாது, இனி இது போன்ற செய்திகள் அடிக்கடி வரும்
Rate this:
Cancel
aravindhan - singapore,சிங்கப்பூர்
22-ஜூன்-202113:15:03 IST Report Abuse
aravindhan இந்துக்களே....இந்து சொந்தங்களே...நம் சமுதாயத்திற்காக ஒன்றை எல்லோரும் செய்யவேண்டும். நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என எல்லோரிடமும் மதமாற்றத்தின் ஆபத்தைப் பற்றி விளக்கவேண்டும். இந்துக்களில் ஜாதி இருப்பதை பயன்படுத்தி மூளைச்சலவை செய்தும், லவ் ஜிகாத் என்ற பெயரிலும் மத மாற்றம் செய்வதின் குரூர நோக்கத்தைப்பற்றி தெளிவாக விளக்கவேண்டும். சரியான புரிதல் இல்லாத மக்களிடம் இந்த குரூர புத்தி கொண்ட கும்பலின் நோக்கம் நிறைவேறுகிறது. இளம் பெண்கள் இந்த கும்பலின் வஞ்சக வலையில் விழுந்து தங்களது வாழ்க்கையை இழக்கின்றனர். பின்னாளில் தவறை உணர்ந்து எந்த பலனும் இல்லை என்பதை உணர்கின்றனர். கொடூர புத்தி கொண்டு அலையும் இந்த கும்பலின் வஞ்சக வலையில் விழாமல் இருக்க ஒவ்வொருவரும் முடிந்த அளவு அறிவுரை சொல்லுங்கள். ஜெய் ஹிந்த்...வந்தே மாதரம்....பாரத் மாதா கீ ஜெய்....
Rate this:
Cancel
Senthil Raman - Coimbatore,இந்தியா
22-ஜூன்-202113:13:58 IST Report Abuse
Senthil Raman முஸ்லிம்கள் மக்கள்தொகை அதிகமாகிவிட்டால் இந்த நாடு முஸ்லீம் நாடாகிவிடும். கிருஸ்தவர்கள் அதிகமாகிவிட்டால் இந்த நாடு கிருஸ்தவ நாடாகிவிடும். இந்துக்கள் அதிகமாக இருப்பதால்தான் இந்தியா இன்னும் மதசார்பற்ற, ஜனநாயக நாடக இருக்கிறது. நடுநிலை இந்துக்கள் இதனை உணர்ந்து திருந்தி செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் முக்கியமாக திராவிட காட்சிகளில் இருக்கும் இந்துக்கள் இதனை உணரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X