பாக்.,கில் வன்புணர்வு குறித்து இம்ரானின் சர்ச்சைப் பேச்சுக்கு கண்டனம்

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் ஒரு சர்ச்சைக்குள்ளான பதிலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் அளித்து சர்ச்சையில் சிக்கினார். பாகிஸ்தான் நாட்டில் பாலியல் வன்முறைகள் மற்றும் சீண்டல்கள் அதிகமாகி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த இம்ரான், ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் ஒரு சர்ச்சைக்குள்ளான பதிலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் அளித்து சர்ச்சையில் சிக்கினார்.



latest tamil news



பாகிஸ்தான் நாட்டில் பாலியல் வன்முறைகள் மற்றும் சீண்டல்கள் அதிகமாகி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த இம்ரான், ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆபாசமாக உடை அணிந்ததால் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் நடைபெறு கின்றன என்று கூறியது அப்போது சர்ச்சையை ஆகியது.
இதுகுறித்து தற்போது விவோ தொலைக்காட்சிப் பேட்டியில் விளக்கம் கேட்டபோது பாகிஸ்தான் பெண்கள் அனைவரும் புர்கா அணிவதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கூறினேன் என்று தெரிவித்தார் இம்ரா. மேலை நாடுகளில் இருப்பதுபோல டிஸ்கோ, நைட் கிளப்புகள் பாகிஸ்தானில் கிடையாது. பெண்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால் பாகிஸ்தான் இளைஞர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்று கூறி உள்ளார்.


latest tamil news




இம்ரான் கானின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் செய்தி தொடர்பாளர் மரியம் அரன்செப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெண்களின் ஆடைகள் காரணமாக பாலியல் அத்துமீறல்கள் நடைபெறுவதில்லை. ஆண்களின் கெட்ட எண்ணங்கள் மூலமாகவே பெண்களுக்கு தொல்லை ஏற்படுகிறது என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இம்ரான் பெண்களை காரணமின்றி வெறுக்கும் ஆணாதிக்கவாதி என விமர்சித்துள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக பாகிஸ்தானில் 22 ஆயிரம் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு நாளும் 11 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இவர்களுள் மிகக் குறைந்த குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கிறது என்று பாகிஸ்தான் ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
22-ஜூன்-202114:35:14 IST Report Abuse
M  Ramachandran அன்கு நீதி அரசர்களும் அத்தகையவர்கள் போல் தெரிகிறது.ஒரு கட்டுப்பாடற்ற அரசாங்கம் அன்கு நடக்கிறது. இதுபோல் வேறு முஸ்லீம் நாடுகளில் நடந்தால் தண்டனை மிக கடினம். பயம் மிருக்கும். ஒரு பிரதமரே இப்படி வக்ர எண்ணத்தை பிரிபலிக்கும் கருத்தை தெரிவித்தால் ஆண்கள் எப்படி நடப்பார்கள். உலகில் எல்ல வகையிலும் ஒரு மோசமான ஒரு தீ வீர வாத நாடு பாகிஸ்தான்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
22-ஜூன்-202112:05:37 IST Report Abuse
Rasheel இவனே பெரிய அந்த மாதிரி விளையாட்டுக்காரன். இவனிடம் இருந்து வேறு எந்த பதில் வரும்? இரண்டாவது அமைதி மார்க்க நாடுகளில் அரசியல் அதிகாரத்திற்காக அடுத்தவர்களை அடக்குவதற்காக இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதாக செய்திகள் வருகின்றன.
Rate this:
Cancel
Karthik - Dindigul,இந்தியா
22-ஜூன்-202111:09:18 IST Report Abuse
Karthik விளையாடும் அரசியலும் ஒன்று என நினைத்து விட்டு குதித்துவிட்டான். வெறும் புகழ்ச்சி மட்டுமே இருந்தால் இப்பதிதான். திறமையும் வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X