மியான்மர் அகதிகள் 10,000 பேர் இந்தியா, தாய்லாந்தில் தஞ்சம்

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
நியூயார்க் : மியான்மரில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, அங்கிருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.நம் அண்டை நாடான மியான்மரில், பிப்., 1ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மியான்மர் அதிபர் வின் மைன்ட், அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சி மற்றும் அரசு உயரதிகாரிகள் பலர் வீட்டுச் சிறையில்

நியூயார்க் : மியான்மரில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, அங்கிருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.



latest tamil news



நம் அண்டை நாடான மியான்மரில், பிப்., 1ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மியான்மர் அதிபர் வின் மைன்ட், அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சி மற்றும் அரசு உயரதிகாரிகள் பலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவித்து, மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ராணுவம் இரும்புக் கரமுடன் நசுக்கி வருவதால், பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால், உயிர் பிழைக்க அஞ்சி ஆயிரக்கணக்கானோர் இந்தியா, தாய்லாந்து நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.


latest tamil news



இது குறித்து, ஐ.நா., பொதுச் செயலரின் மியான்மருக்கான துாதர் கிறிஸ்டைன் ஸ்க்ரானர் பர்கனர் கூறியதாவது:
பதற்றம் மியான்மரில் நிலைமை மோசமாக உள்ளது. மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள தயாராகி வருகின்றனர். ஆயுதமேந்திய குழுக்களுடன் சேர்ந்து போர் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். சுயமாக ஆயுதம் தயாரிக்கின்றனர். இதுவரை அமைதியாக இருந்த பகுதிகளில் கூட தற்போது பதற்றம் நிலவுகிறது. இதனால், 1.75 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.


latest tamil news



அவர்களில், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உலக நாடுகள் இணைந்து, மியான்மர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். தவறினால், பிராந்தியத்தின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
22-ஜூன்-202112:39:10 IST Report Abuse
Ramesh Sargam பிற நாட்டு அகதிகளை இந்தியாவில் ஒருநாளும் அனுமதிக்க கூடாது. உடனே, எனக்கு மனிதாபிமானம் இல்லையா? என்று கேட்காதீர்கள். எனக்கும் மனிதாபிமானம் உண்டு. இந்த அகதிகள் விஷயத்தில் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வேண்டுமென்றால், ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சேர்ந்து இவர்களுக்கு உதவலாம். ஆனால், ஒருக்காலும் இந்தியாவில் இவர்கள் அனுமதிக்க படக்கூடாது. நம் நாட்டு மக்கள் பிரச்சினையே அதிகம். அதில், இவர்கள் பிரச்சினை வேறா??
Rate this:
Cancel
hariharan - Bangalore,இந்தியா
22-ஜூன்-202111:51:00 IST Report Abuse
hariharan தயவு செய்து இந்த ரொஹின்யாஸ் எல்லாம் நம் நாட்டில் விட வேண்டாம் எந்த விட நிதி துணிமணிகள் சாப்பாடு எல்லாம் நாம் கொடுப்போம் - அவர்கள் வேறு நாட்டிற்கு செல்லட்டும் எல்லா உதவிகளும் செய்யவோம் இடம் கொடுப்பதை தவிர
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
22-ஜூன்-202107:36:20 IST Report Abuse
blocked user சீனா அண்டை நாடுகளை வாழவிடாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X