பொது செய்தி

இந்தியா

மத மோதலை ஏற்படுத்தும் 'வீடியோ'; 'டுவிட்டர்' நிறுவனத்தின் பதிலால் உ.பி., போலீசார் அதிருப்தி

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் 'வீடியோ' வெளியிடப்பட்டதாக கூறப்படும் வழக்கில், 'டுவிட்டர்' நிறுவனம் முறையாக பதில் அளிக்காததால், போலீசார் அதிருப்தி அடைந்துள்ளனர்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. காஜியாபாதில், 'ஜெய்ஸ்ரீராம்' என கோஷமிடும்படி, முஸ்லிம் முதியவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Twitter, UP, Summon, Police, Disappointed, டுவிட்டர், உபி, போலீஸ், சம்மன், நோட்டீஸ், அதிருப்தி

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் 'வீடியோ' வெளியிடப்பட்டதாக கூறப்படும் வழக்கில், 'டுவிட்டர்' நிறுவனம் முறையாக பதில் அளிக்காததால், போலீசார் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. காஜியாபாதில், 'ஜெய்ஸ்ரீராம்' என கோஷமிடும்படி, முஸ்லிம் முதியவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, டுவிட்டர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிடப்பட்டது. மத மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாக, டுவிட்டர் நிறுவனம் உட்பட பலர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து பதிலளிக்கும்படி, டுவிட்டர் நிறுவனத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அதற்கு முறையான பதில் அளிக்கப்படாததால், போலீசார் அதிருப்தி அடைந்துள்ளனர். நிறுவனத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.


வழக்கு ஒத்திவைப்பு



latest tamil news



'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' சமூக வலைதளங்களின் புதிய தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கை தொடர்பாக தகவல் கேட்டு, சி.சி.ஐ., எனப்படும் இந்திய தொழில் போட்டி கமிஷன் அனுப்பியுள்ள உத்தரவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை, டில்லி உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்து உள்ளது. 'முக்கிய வழக்கை, தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது. அது தொடர்பாக, ஜூலை 9ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது. 'அந்த விசாரணையின் அடிப்படையில், இந்த வழக்கில் முடிவு எடுக்கப்படும்' என, அமர்வு கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜூன்-202116:06:17 IST Report Abuse
தமிழவேல் மதமோதலை ஏற்படுத்தலாம் என்பதற்காக முடக்க வேண்டுகின்றனரா, அல்லது அது கட்சி வளர்ச்சியை பாதிக்கின்றது என்பதனாலா ?
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
22-ஜூன்-202113:45:26 IST Report Abuse
Vena Suna ஃபேஸ்புக். ட்விட்டர் ,யூடியூப் இந்த மூன்றையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் மத்திய அரசு. நாட்டை கெடுக்க இவர்கள் செய்யும் வேலை ரொம்ப ரொம்ப அதிகம்.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
22-ஜூன்-202112:44:52 IST Report Abuse
SUBBU டுவிட்டரின் நடவடிக்கை அதிருப்தி அளிக்கிறது,வருத்தமாக உள்ளது,இந்திய இறையான்மைக்கு எதிரானது, என்று வாய் சவடால் விடக்கூடாது. அமெரிக்காவுக்கு ஒரு நீதி இந்தியாவுக்கு ஒரு நீதி என்று மதுரையில் கண்ணகி சிலம்புடன் நின்று பாண்டிய மன்னனை கேட்டது போல் இந்த டுவிட்டரை கேட்காமல் ஒரே அடியாக அதை முகத்தில் அறைந்து இந்தியாவில் அதை நிறுத்துவதே சாலச் சிறந்தது. மயிலே மயிலே என்றால் இறகு போடாது?
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
22-ஜூன்-202118:05:10 IST Report Abuse
Darmavanமோடி ஏன் அதை செய்யவில்லை. தைரியமில்லையா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X