பொது செய்தி

தமிழ்நாடு

மலை வாழ் மக்களை தேடி சென்ற கலெக்டர்; இருளில் வாழ்ந்த காணி இன மக்களுக்கு ஒளி

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
திருநெல்வேலி; பாபநாசம் மைலாறு, அகஸ்தியர்மலை, இஞ்சிக்குழி, சேர்வலாறு வனப்பகுதிகளில் 145 குடும்பங்கள் காணி இன மக்கள் வசிக்கின்றனர். இருளில் வாழ்ந்த இந்த மக்களுக்கு மின் ஒளியை வழங்க கலெக்டர் ஏற்பாடு செய்தார்.பாபநாசம் மைலாறில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதுவரை ஊசியை தவிர்த்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மீதமுள்ளவர்களுக்கு வரும்

திருநெல்வேலி; பாபநாசம் மைலாறு, அகஸ்தியர்மலை, இஞ்சிக்குழி, சேர்வலாறு வனப்பகுதிகளில் 145 குடும்பங்கள் காணி இன மக்கள் வசிக்கின்றனர். இருளில் வாழ்ந்த இந்த மக்களுக்கு மின் ஒளியை வழங்க கலெக்டர் ஏற்பாடு செய்தார்.latest tamil newsபாபநாசம் மைலாறில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதுவரை ஊசியை தவிர்த்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மீதமுள்ளவர்களுக்கு வரும் வார இறுதியில் முகாம் நடக்கிறது. முகாமில் கலெக்டர் விஷ்ணு, மருத்துவப்பணிகள் துணை இயக்குநர் வரதராஜன், மாவட்ட வனஅலுவலர் கவுதம், சப் கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி, நபார்டு வங்கி மேலாளர் சலீமா பங்கேற்றனர். காணி இன மக்கள் உற்பத்தி செய்யும் மூலிகைகள், மருத்துவ தாவரங்கள், கிழங்கு, தேன் உள்ளிட்ட உணவு பொருட்களின் கண்காட்சி நடந்தது.


வீட்டிற்கு ஒரு சோலார் மின் தகடுநிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறுகையில்,

பாபநாசம் அணைக்கும் மேலே இஞ்சிக்குழி எஸ்டேட்டில் இதுவரை மின்சார வசதியில்லை. இருளில் சிரமப்பட்டு வந்ததனர். அங்கு வசிக்கும் 9 குடும்பத்தினருக்கும் ஒரு சூரியஒளி மின்தகடு வீதம் வழங்கப்பட்டது. இதன்மூலம் ஒரு குடும்பத்தினர் ஒரு மின்விளக்கு ஒரு மின்விசிறி பயன்படுத்திக்கொள்வர். காணி இன மக்கள் உற்பத்தி செய்யும் கிழங்கு வகைகள், மருந்துபொருட்கள் உள்ளிட்ட 45 இயற்கை விளைபொருட்களுக்கு ஆர்கானிக் சான்று வழங்கப்படும்.


latest tamil newsஅவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை திருநெல்வேலிக்கு விற்பனைக்கு கொண்டுவர ஒரு சரக்கு வாகனம் நபார்டு மூலம் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் விற்பனை மையம் ஏற்படுத்தப்படும். விளைபொருட்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல தொழில்முனைவோரின் ஆலோசனை பெறப்படும். படித்த காணி இன மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பெற பயிற்சியளிக்கப்படும். காணியின மக்களின் பல்வேறு நாட்டுப்புற கலைவடிவங்களை ஆவணப்படுத்த உள்ளோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூன்-202119:50:29 IST Report Abuse
Dharmalingam இதேபோல் இவர்கள் வாழ்க்கையில் நிரந்தரமாக கல்வி எனும் விளக்கேற்ற மாவட்ட ஆட்சியர்கள் இவர்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்க வழி ஏற்படுத்துவதே, இந்த சமுதாய மக்கள் வாழ்க்கையில் உண்மையான வெளிச்சத்தைக் கொடுக்கும்.ஆட்சியர்கள், ஆட்சியாளர்கள் ஆவன செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
DOSS - புதுச்செரி,இந்தியா
22-ஜூன்-202119:26:55 IST Report Abuse
DOSS அவர்களுக்கான பள்ளி ஆஸ்ரம் பள்ளியைத் தொடங்குவதே சரியான் உதவியாக இருக்கும். நவொதயா போன்ற பள்ளிகள் இல்லாமல் இருப்பதற்கு ஆஸ்ரம் மிகவும் உறுதுணையாக இருக்கும்
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
22-ஜூன்-202117:00:14 IST Report Abuse
a natanasabapathy இவ்வளவு நாட்களாக yenkittu இருந்தாவ இந்த Athikaarikal நடிப்பில் அரசியல்வாதிகளையும் மிஞ்சுகிறார்கள் அதிகாரிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X