பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் போக்குவரத்து இயக்கத்தில் குழப்பம் ஏன்?

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
தமிழக அரசு புதிதாக அறிவித்த ஊரடங்கு தளர்வுகள், நேற்று அமலுக்கு வந்தன.தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 28ம் தேதி காலை 6:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மாவட்டங்கள், நோய் தொற்று பாதிப்பின் அடிப்படையில் மூன்று பிரிவாக வகைப்படுத்தப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பிரிவு ஒன்றில் இடம் பெற்றுள்ள, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம்
lockdown, districts, ஊரடங்கு, மாவட்டங்கள், குழப்பம்

தமிழக அரசு புதிதாக அறிவித்த ஊரடங்கு தளர்வுகள், நேற்று அமலுக்கு வந்தன.தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 28ம் தேதி காலை 6:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்கள், நோய் தொற்று பாதிப்பின் அடிப்படையில் மூன்று பிரிவாக வகைப்படுத்தப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பிரிவு ஒன்றில் இடம் பெற்றுள்ள, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு, புதிய தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டுமே, தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளன.


latest tamil news



பிரிவு இரண்டில் இடம் பெற்றுள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரிவு மூன்றில் இடம் பெற்ற, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும், 50 சதவீத பயணியருடன் அரசு பஸ்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்த புதிய தளர்வுகள் அனைத்தும், நேற்று முதல் அமலுக்கு வந்தன. சென்னையில் பெரிய கடைகள் தவிர்த்து, சிறிய கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால், வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் நேற்று முதல் இயங்கின. தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க துவங்கி உள்ளன. இதனால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

தமிழக அரசு 20ம் தேதி வெளியிட்ட தளர்வுகள், பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. கடைகள் திறப்பு நேரம், காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, இரவு 9:00 மணி வரை, மாலை 5:00 மணி வரை என, வெவ்வேறு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது, தேவையற்றது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். அனைத்து கடைகளுக்கும், ஒரே நேரத்தை அறிவிக்கலாம். வெவ்வேறு நேரம் அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், அரசு பஸ்சில் பயணிக்க, கால் டாக்சி, ஆட்டோ போன்றவற்றில் செல்ல, இ - பதிவு தேவையில்லை. இருசக்கர வாகனத்தில் செல்ல இ - பதிவு தேவை என்பதும் தேவையற்றது.

சென்னையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 439; செங்கல்பட்டில் 310; காஞ்சிபுரத்தில் 103, திருவள்ளூரில் 197 ஆக உள்ளது. இம்மாவட்டங்களில், பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், பெரம்பலுாரில் 37; திருநெல்வேலியில் 45; ராமநாதபுரத்தில் 49; தென்காசியில் 51 என, 12 மாவட்டங்களில், நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100க்கு கீழ் குறைந்துள்ளது. இம்மாவட்டங்களில், பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்படாததற்கான காரணம் தெரியவில்லை.எனவே, அரசு தளர்வுகளை மறு பரிசீலனை செய்து, ஒரே சீரான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என, பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
22-ஜூன்-202118:13:18 IST Report Abuse
g.s,rajan ஆட்சி நடத்த தடுமாறுகிறாரா தமிழக முதல்வர் ஸ்டாலின் துக்ளக் ஆட்சியை நினைவு படுத்துகிறார் முதல்வர் முக ஸ்டாலின் ஜி,எஸ் ,ராஜன், சென்னை.
Rate this:
Cancel
Indian - Tirunelveli, Tamil Nadu,இந்தியா
22-ஜூன்-202118:05:28 IST Report Abuse
Indian காரோனா தொற்றின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதை ஏற்கும் பட்சத்தில், இரண்டாம் பிரிவில் மாவட்டத்திற்குள் பேருந்து செல்லலாம் என்றும், மாவட்டத்திற்கிடையில் செல்ல அனுமதி இல்லை என்பது தேவையற்றது என்று தோன்றுகிறது. ஒரு மாவட்டத்தில் காரோனா தோற்று மிக குறைவாகவும், அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மிக அதிகமாகவும் இருந்தால் மேற்கூறப்பட்ட கருத்து செல்லுபடியாகலாம். எல்லா மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பாதிப்பு இருக்கும்போது இந்த விதிமுறை பொருந்தாது.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
22-ஜூன்-202116:57:17 IST Report Abuse
a natanasabapathy அரசு குழப்பத்தில் உள்ளதையே அறிவிப்புகள் உணர்த்துகின்றன தெளிவான வழிமுறைகல் இல்லை பொத்தாம் பொதுவாக சிறிய கடைகள் என்று கூறுகின்றனர் எப்படி அளவீடு செய்வது டூ வீலரில் செல்பவர்களுக்கு யீ பதிவு கட்டாயம் என்பது பயித்தியக்கார அறிவிப்பு கூட்டமாக பேருந்தில் பயணிக்க யீ பதிவு தேவை இல்லை எனும்போது டூ வீலருக்கு ஏன் கட்டாயம் வெளி மாநிலங்களில் சிக்கிக்கொண்டவர்கள் திரும்பி வர எந்த வசதியும் செய்யப்படவில்லை மண்டை காய்ந்து போகிறது இதற்கும் ஒரு வல்லுநர் குழு அமைக்க வேண்டுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X