கம்யூ.களும் தான் கட்டுப்பாடான கட்சி என்கின்றனர். அதற்காக அப்படியா இருக்கிறது...

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
பா.ஜ., கட்டுப்பாடான கட்சி என, புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவர் கூறி இருக்கிறார். ஆனால், அமைச்சர் பதவி கேட்டு, பா.ஜ.,வினர், புதுச்சேரி பா.ஜ., அலுவலகத்தை சூறையாடியுள்ளனர்.- மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்'கம்யூ.,க்களும் தான் கட்டுப்பாடான கட்சி என்கின்றனர். அதற்காக, அப்படியா இருக்கிறது... கேரள முதல்வர் பினராயி விஜயன் இளமை கால கதைகளை கேட்டு பாருங்கள்.
வாசன்,விஜயகாந்த், திருமாவளவன்,ஜி.ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், நாராயணன் திருப்பதி

பா.ஜ., கட்டுப்பாடான கட்சி என, புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவர் கூறி இருக்கிறார். ஆனால், அமைச்சர் பதவி கேட்டு, பா.ஜ.,வினர், புதுச்சேரி பா.ஜ., அலுவலகத்தை சூறையாடியுள்ளனர்.
- மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்


'கம்யூ.,க்களும் தான் கட்டுப்பாடான கட்சி என்கின்றனர். அதற்காக, அப்படியா இருக்கிறது... கேரள முதல்வர் பினராயி விஜயன் இளமை கால கதைகளை கேட்டு பாருங்கள். அப்படியே 'ஷாக்' ஆகிடுவீங்க...' என, சொல்ல தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை.



மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் இந்த நேரத்தில், மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும். கட்ட தவறினால், மின் இணைப்பை துண்டிப்பதோ அல்லது அபராத தொகை வசூலிப்பதோ கூடாது.
- த.மா.கா., தலைவர் வாசன்


'இதை சிம்பிளாக, 'கட்டணம் செலுத்த மாட்டோம்; எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது' என்று கூட சொல்லி விடலாமே...' என, சொல்ல தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை.



கொரோனா தொற்று முடிந்த பிறகு, முன்னாள் அமைச்சர்கள் மீதான மருத்துவ துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்


'இதைத் தான், ஆளும் கட்சி மற்றும் கூட்டணி தலைவர்கள் விரும்புகின்றனரோ...' என, சொல்ல தோன்றும் வகையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி.



மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் விவகாரம் குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு விரைந்து கூட்ட வேண்டும்.
- தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்


latest tamil news




'எதற்கு அனைத்து கட்சி கூட்டம்; உங்கள் கட்சியும் இருக்கிறது என்பதை காட்டுவதற்காகவா...' என கேட்க தோன்றும் வகையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை.



காவிரி நதி நீர் பிரச்னை, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமான பிரச்னையாக கருதாமல், அதை தமிழக ஒட்டுமொத்த மக்களுக்குமான பிரச்னையாக மாற்ற வேண்டிய கடமை, தி.மு.க., அரசுக்கு உள்ளது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்


'பிரச்னையை எப்படி பெரிதுபண்ண வேண்டும்; எப்படி முடக்க வேண்டும்; எப்படி போராட்டங்களுக்கு வியூகம் வகுப்பது என்பதெல்லாம் நீங்கள் சொல்லி தான், தி.மு.க., அறிய வேண்டுமா என்ன...' என, கேட்க தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை.



தற்போதைய நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரியை, தமிழக அரசு குறைக்க போவதில்லை என, தமிழக நிதிஅமைச்சர் தியாகராஜன் கூறிஉள்ளார். அப்படியானால், தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதியை தி.மு.க., அளித்ததா?
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


'முடியாது என்று சொல்லவில்லையே; 'இப்போதைக்கு' முடியாது என்று தானே சொல்லியுள்ளது. அதனால், தி.மு.க.,வை சாடாதீர்...' என, கிண்டலாக சொல்ல தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh Shetty - chennai,இந்தியா
22-ஜூன்-202120:05:21 IST Report Abuse
Ganesh Shetty என்னது கம்யூனிஸ்ட் கட்சி கட்டுக் கோப்பா? கேட்கவே வேடிக்கையாக உள்ளது புதுச்சேரி வரலாறு தெரியாதவர்கள் தான் இதுபோல் கூறுவார்கள் உண்மையில் வா.சுப்பையா தலைவார்காக இருந்தபோது தேர்தல் நேரத்திலே கற்கள் பறக்கும் கற்களாய் தாக்கிக்கொள்வார்கள் அதுவும் சாதாரண கற்கள் ரோடு போடுவதற்கு முன்பு உபயோக படுத்தும் ஒருவித மஞ்சள் கலந்த பாறைகள் போல் காணப்படும் பார்த்தாலே வயிற்றைய் கலக்கும் நன்கு பெரியதாய் இருக்கும்.நடு ரோட்டில் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொள்வார்கள் ஏனினில் டாக்டர் ரங்கநாதன் போன்றவர்கள் எல்லாம் சாதாரண ஆட்களோ ? ப ஜா க என ஜூஜிபி
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
22-ஜூன்-202116:55:50 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\கேரள முதல்வர் பினராயி விஜயன் இளமை கால கதைகளை கேட்டு பாருங்கள்.\\ ....... இப்போ மாறிட்டாரா ?
Rate this:
Cancel
22-ஜூன்-202111:16:57 IST Report Abuse
மனுநீதி கம்யூனிஸ்ட் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கலாம்... ஆனால் அங்கு மக்கள் முழு அதிகாரத்துடன் வாழ முடியாது. உதாரணமாக சீனா, வட கொரியா போன்ற நாடுகளை சொல்லலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X