பொது செய்தி

இந்தியா

உலக அளவில் புது சாதனை: ஒரே நாளில் 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (4+ 2)
Share
Advertisement
புதுடில்லி :நாடு முழுதும் நேற்று ஒரே நாளில், 86 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தடுப்பூசி தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டார். அதன்படி, மொத்த தடுப்பூசி தயாரிப்பில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி :நாடு முழுதும் நேற்று ஒரே நாளில், 86 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தடுப்பூசி தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டார். அதன்படி, மொத்த தடுப்பூசி தயாரிப்பில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். எஞ்சிய 25 சதவீத தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


புதிய தடுப்பூசி விதிமுறைகள் சர்வதேச யோகா தினமான நேற்று அமலுக்கு வந்தன. இதன்படி, நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் நாளான நேற்று, 86 லட்சத்து 16 ஆயிரத்து 173 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன், ஏப்., மாதத்தில் தான், ஒரே நாளில் 43 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம், இதுவரை, 28,87,66,201 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (4+ 2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஜூன்-202112:21:43 IST Report Abuse
Janarthanan 130 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட்ட ஒரே நாடு என்ற பெயரையும் / பின்பு மேலும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெருமையும் இந்தியவிற்கு தான் கிடைக்க போகிறது
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
22-ஜூன்-202111:52:10 IST Report Abuse
 N.Purushothaman மத்திய அரசின் தடுப்பு ஊசிக்கான கோவின் செயலியை பயன்படுத்த இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்து உள்ளன ....செயலியை எதற்கு பயன்படுத்தணும்ன்னு நொட்டை சொன்ன ராவுல கண்டா வர சொல்லுங்க ...இது போன்ற செய்திகள் எல்லாம் நம்ம ஊரு முன்களப்பாய்ங்க வெளியிட மாட்டாய்ங்க
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
22-ஜூன்-202111:17:31 IST Report Abuse
suresh kumar இதே வேகத்தில் போனால், இன்னும் ஐந்து மாதத்தில் எல்லோருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X