கோவிட் தோற்றம், பரவல் சர்ச்சை: அமெரிக்க விஞ்ஞானிக்கு சிக்கல்

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
வாஷிங்டன்: உலகையே உலுக்கி வரும் கோவிட் வைரஸ் சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்டது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கோவிட் வைரஸ் பரவியதாக அறிவித்தார். மேலும், 'சீன வைரஸ்' என்றே அதை அவர் அழைத்து வந்தார். டிரம்ப் ஆட்சியில் கோவிட் வைரஸ் பரவல் தடுப்பு குழுவின் தலைவராக விஞ்ஞானி அந்தோணி பவுசி, 80,

வாஷிங்டன்: உலகையே உலுக்கி வரும் கோவிட் வைரஸ் சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்டது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கோவிட் வைரஸ் பரவியதாக அறிவித்தார். மேலும், 'சீன வைரஸ்' என்றே அதை அவர் அழைத்து வந்தார். டிரம்ப் ஆட்சியில் கோவிட் வைரஸ் பரவல் தடுப்பு குழுவின் தலைவராக விஞ்ஞானி அந்தோணி பவுசி, 80, நியமிக்கப்பட்டார். எனினும் டிரம்புக்கும் அந்தோணி பவுசிக்கும் இடையே ஏராளமான கருத்து வேறுபாடுகள் எழுந்தன.latest tamil newsகடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று, கடந்த ஜனவரியில் அதிபராக பதவியேற்றார். புதிய அரசின் தலைமை மருத்துவ ஆலோசகராக அந்தோணி பவுசி நியமிக்கப்பட்டார். இதனிடையே அந்தோணி பவுசி அதிகாரபூர்வமாக அனுப்பிய இமெயில்கள் குறித்த விவரங்களை சுதந்திர தகவல் சட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க அரசிடம் இருந்து ஊடகங்கள் பெற்றன.

அதில், பவுசிக்கும், சீனாவைச் சேர்ந்த வைரஸ் விஞ்ஞானி ஒருவருக்கும் இடையே கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் இமெயில் உரையாடல்கள் கிடைத்துள்ளன. அதில், கோவிட் வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்து பரவிய விஷயத்தை பவுசி மறைத்திருப்பது தெரிய வந்துள்ளது.


latest tamil newsஇதையடுத்து கோவிட் வைரஸ் குறித்து பவுசி பொய்களை கூறியதாகவும் அவரது பொய்களால் அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பதாகவும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி தலைவர்களும் பல்வேறு அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. தலைமை மருத்துவ ஆலோசகர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் அவரை நீக்க வேண்டும் என, அவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதையடுத்து பவுசி தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், 'சீன ஆய்வகத்தில் கோவிட் வைரஸ் உருவாகியிருக்கலாம். இந்த கோணத்தில் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்' என்றார்.latest tamil newsஇப்படி அந்தோணி பவுசி முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவதால், அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளாதவது: எனது பரிந்துரைகளில் மாற்றங்கள் இருந்தது உண்மைதான். ஒரு விஞ்ஞானி என்ற வகையில் அறிவியல்பூர்வமான ஆதாரங்களை அடிப்படையாக வைத்து மட்டுமே எனது பரிந்துரைகளைக் கூறுகிறேன். கோவிட் வைரஸ் தொடர்பான அறிவியல் உண்மைகள் மாறிக் கொண்டே வருகின்றன. இதனால், எனது பரிந்துரைகளிலும் மாற்றங்கள் இருக்கின்றன. என்னை விமர்சனம் செய்பவர்கள், என்னை அல்ல, அறிவியலை விமர்சனம் செய்கின்றனர். என் மீதான விமர்சனங்களை நான் கருத்தில் கொள்வதில்லை. என்னை ஹிட்லர் என்று கூட சிலர் விமர்சிக்கின்றனர். இந்த விமர்சனங்கள் என்னை பாதிக்காது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
22-ஜூன்-202120:44:56 IST Report Abuse
Bismi இவர் பெரிய மருத்தவர். ஆனால் அதை விட பெரிய அரசியல்வாதி. அமெரிக்க ஆராய்ச்சி கழகங்கள், விலங்கிகளிருந்து மனிதர்களுக்கு எப்படி கிருமி தொற்றும் என்ற ஆராய்ச்சிக்கு சீனாவில் உள்ள வூஹான் பரிசோதனைசாலக்கு பணம் கொடுத்துள்ளது. அதில் பவுச்சியும் ஒரு ஆராய்ச்சியாளர். கூட்டுக களவாணிகள்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-ஜூன்-202116:56:44 IST Report Abuse
J.V. Iyer யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.. அம்மம்மா பூமியிலே....
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
22-ஜூன்-202115:53:01 IST Report Abuse
blocked user இவனும் பில் கேட்சும் உலக மகா பிராடுகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X