ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம்; நன்கொடை பெற்று மோசடி செய்த 5 பேர் கைது

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
நொய்டா: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, நன்கொடை என்ற பெயரில் மக்களிடம் பண மோசடி செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து பக்தர்களிடம் நன்கொடையும் பெறப்பட்டது. இந்நிலையில், ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் மூலம்
RamTemple, DonationWebsite, Fraud, Busted, UP, Police, Arrested, ராமர் கோயில், நன்கொடை, போலி, இணையதளம்,5 பேர், கைது, உபி

நொய்டா: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, நன்கொடை என்ற பெயரில் மக்களிடம் பண மோசடி செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து பக்தர்களிடம் நன்கொடையும் பெறப்பட்டது. இந்நிலையில், ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் மூலம் மோசடியாக பணம் பெறுவதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து நொய்டா சைபர் கிரைம் போலீசாரும், லக்னோ சைபர் கிரைம் போலீசாரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


latest tamil news


ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை அயோத்தியா என்ற பெயரில் இணையதளம் தொடங்கி, அதில், ஒரு வங்கிக் கணக்கு எண்ணை பதிவிட்டு, கோயிலுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் இந்த வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளனர். இவ்வாறாக நன்கொடையாக மக்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை இவர்கள் மோசடியாகப் பெற்றுள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டதில் 3 பேர் அமேதியை சேர்ந்தவர்கள், 2 பேர் பீஹாரை சேர்ந்தவர்கள். ஐவரும் கூட்டு சேர்ந்து கிழக்கு டில்லியின் புதிய அசோக் நகரில் தங்கியிருந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜூன்-202106:10:02 IST Report Abuse
இவன் டீமுக காரனுங்க ளுக்கு up ல என்ன வேலை? 🤣🤣🤣
Rate this:
Cancel
தாமரை அழுகும் - சென்னை,இந்தியா
23-ஜூன்-202101:24:08 IST Report Abuse
தாமரை அழுகும் போலிக்கே போலியா?
Rate this:
Cancel
22-ஜூன்-202118:57:42 IST Report Abuse
ஆப்பு கடவுள் எல்லோருக்கும்.புழைக்க ஒரு வழி ஏற்படுத்திக்.குடுப்பாரு. இவிங்களுக்கு போலி ட்ரஸ்ட் வழி. சிலருக்கு 15 லட்சம் போடறேன், 2 கோடி பேருக்கு வேலை தரேன்னு சொன்ன வழி. சிலருக்கு வெட்டிநடை போட்ட தமிழிகமே வழி. சிலருக்கு புது விடியல் காண்போம் வா வழி. எல்லோருக்கும் அந்த பரந்தாமன் தான் படியளக்கிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X