3வது அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: ராகுல்

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி: 3வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.கோவிட் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியதாவது: அரசை குறை சொல்வதற்காக இந்த வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை. கோவிட் 3வது அலையை எதிர்கொள்ள நாட்டிற்கு உதவுவதற்காகவே, வெளியிடப்பட்டு உள்ளது. 3வது அலை வரும் என நாட்டு மக்கள் அனைவருக்கும்
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: 3வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

கோவிட் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியதாவது: அரசை குறை சொல்வதற்காக இந்த வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை. கோவிட் 3வது அலையை எதிர்கொள்ள நாட்டிற்கு உதவுவதற்காகவே, வெளியிடப்பட்டு உள்ளது. 3வது அலை வரும் என நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். மோசமான நிர்வாகத்தால்,முதல் மற்றும் இரண்டாவது அலையில் பேரழிவு ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும். இதற்கான காரணத்தை நாம் கண்டறிய வேண்டும். வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைவதால், 3வது அலையை தொடர்ந்து மேலும் பல அலைகள் வரும் என நான் கூறுகிறேன்.


latest tamil news



இந்த நேரத்தில் தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம். தடுப்பூசி போடும் திட்டத்தை வேகப்படுத்துவதுடன், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். 3வது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக வேண்டும். மருத்துவமனைகள், ஆக்சிஜன் படுக்கைகளை தயார்படுத்த வேண்டும். இரண்டாவது அலையின்போது, பலர் உதவி கிடைக்காமல் உயிரிழந்தனர். அவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை நாம் பூர்த்தி செய்ய முடியவில்லை. பிரதமரின் கண்ணீர்,, கோவிட்டால் உறவினர்களை இழந்தோரின் கண்ணீரை துடைக்காது. அவுர்களை காப்பாற்றாது. ஆனால், பிரதமர் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தாமல், மே.வங்க தேர்தலில் கவனம் செலுத்தினார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜூன்-202107:38:12 IST Report Abuse
கி நாராயணன் இரண்டாம் அலை கோவில் பரவ நீயும் உன் கூட்டணி களவாணி கூட்டம்தான் காரணம் மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் தடுத்து பெரிய உயிர் சேதம்‌, பொருட்சேதத்திற்கும் காரணமான நீயும் உன் கட்சியும் , உன் கூட்டணி கட்சி தலைவர்கள் தான் காரணம் மூன்றாவது கொரோனா அலை வந்தால் அதற்கு முழுவதும் நீயும் உன் கூட்டணி கட்சி தலைவர்கள் தான் காரணமாக இருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை
Rate this:
Cancel
Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-202104:46:52 IST Report Abuse
Krishnan விவசாய போராட்டம் என்கிற பெயரில் யூகே வகை உருமாற்றம் பெற்ற வைரஸை பரப்பியதே இந்த காங்கிரஸ் கட்சி தான். யாரும் போராட்டத்தில் இருந்து ஒரு இன்ச் கூட அசையக்கூடாது என்று கூறிய ராகுல், இந்தியர்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மட்டுமே நினைக்கிறார்கள்..
Rate this:
Cancel
22-ஜூன்-202122:05:56 IST Report Abuse
ஆப்பு மூணாவது அலை தானே வராது.பரவாது.எலக்‌ஷன் கமிஷன் தேர்தல் வெக்கணும்.பறந்து வந்து பரப்புரை செய்யணும்.கும்பமேளா, அகில உலக மூர்கர் மாநாடுன்னு ஏதாவது நடத்தி கூட்டம் கூட்டணும். அப்பத்தான் மூணாவது அலை பரவும். அப்புறமா தயார் ஆகலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X