வைரக் கற்கள் அல்ல... மக்கள் ஏமாற்றம்: தொற்று பரவலால் தென் ஆப்பிரிக்க அரசு கலக்கம்

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
பிரிட்டோரியா: தென் ஆப்பிரிக்காவில் வைரம் எனக் கருதி, கற்களைத் தேடி எடுத்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, அவை படிகக் கற்கள் எனத் தெரியவந்துள்ளது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. வறுமை அதிகம் நிலவும் ஆப்பிரிக்க நாடுகளில்தான் வைரங்கள் அதிகம் கண்டெடுக்கப்படுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதன் எடை 3,106 கேரட். உலகின்

பிரிட்டோரியா: தென் ஆப்பிரிக்காவில் வைரம் எனக் கருதி, கற்களைத் தேடி எடுத்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, அவை படிகக் கற்கள் எனத் தெரியவந்துள்ளது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.



latest tamil news



வறுமை அதிகம் நிலவும் ஆப்பிரிக்க நாடுகளில்தான் வைரங்கள் அதிகம் கண்டெடுக்கப்படுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதன் எடை 3,106 கேரட். உலகின் 2வது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் 2016ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 1,109 கேரட். உலகின் 3வது பெரிய வைரமும் போட்ஸ்வானாவில்தான் சில நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் குவாசுலு நடால் மாகாண மலைப் பகுதிகளில் வைரம் கிடைக்கிறது என்ற தகவல் பரவியது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் அங்கு கற்களைத் தேடி எடுத்தனர். இந்த நிலையில் அவை வைரக் கற்கள் இல்லை. வெறும் படிகக் கல் தான் என, ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.


latest tamil news



இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அரசு அதிகாரிகள் கூறுகையில், 'கோவிட் காரணமாகத் தென் ஆப்பிரிக்காவில் கடுமையான வறுமை ஏற்பட்டுள்ளது. வேலையின்மை காரணமாக வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. கோவிட் தீவிரமாகப் பரவும் காலத்தில், இது போன்ற வதந்திகளை நம்பி மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இப்படி அதிகப்படியானோர் ஒரே இடத்தில் கூடுவதால் கோவிட் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவுகிறது. மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
22-ஜூன்-202118:44:37 IST Report Abuse
blocked user இரத்தம் தோய்ந்த இயற்கை வைரங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆய்வகத்தில் செய்யப்பட வைரம் நன்றாகவே இருக்கிறது. லேசர் வைத்து பிளாக்செயினில் பெற்ற சங்கேத சீரியல் நம்பர் கூட போட்டுக்கொடுக்கிறார்கள்..
Rate this:
மோகன் - கென்ட்,யுனைடெட் கிங்டம்
22-ஜூன்-202120:15:03 IST Report Abuse
மோகன்உங்கள் கருத்து மிகவும் சரி. ரத்த வைரம்.. பாவம் ஆப்பிரிக்க மக்கள். இந்த வைரத்திற்க்காக பெரிய வர்த்தக நிறுவனங்கள் இவர்களை அடிமைகளாக வேலை வாங்குகிறார்கள்....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-ஜூன்-202116:51:46 IST Report Abuse
J.V. Iyer ஏமாறும் மக்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
22-ஜூன்-202114:14:44 IST Report Abuse
 N.Purushothaman இதுக்கு கூட Black lives matter தான் காரணமாக இருக்குமோ ? .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X