வைரக் கற்கள் அல்ல... மக்கள் ஏமாற்றம்: தொற்று பரவலால் தென் ஆப்பிரிக்க அரசு கலக்கம்| Dinamalar

வைரக் கற்கள் அல்ல... மக்கள் ஏமாற்றம்: தொற்று பரவலால் தென் ஆப்பிரிக்க அரசு கலக்கம்

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (9)
Share
பிரிட்டோரியா: தென் ஆப்பிரிக்காவில் வைரம் எனக் கருதி, கற்களைத் தேடி எடுத்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, அவை படிகக் கற்கள் எனத் தெரியவந்துள்ளது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. வறுமை அதிகம் நிலவும் ஆப்பிரிக்க நாடுகளில்தான் வைரங்கள் அதிகம் கண்டெடுக்கப்படுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதன் எடை 3,106 கேரட். உலகின்

பிரிட்டோரியா: தென் ஆப்பிரிக்காவில் வைரம் எனக் கருதி, கற்களைத் தேடி எடுத்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, அவை படிகக் கற்கள் எனத் தெரியவந்துள்ளது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.



latest tamil news



வறுமை அதிகம் நிலவும் ஆப்பிரிக்க நாடுகளில்தான் வைரங்கள் அதிகம் கண்டெடுக்கப்படுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதன் எடை 3,106 கேரட். உலகின் 2வது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் 2016ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 1,109 கேரட். உலகின் 3வது பெரிய வைரமும் போட்ஸ்வானாவில்தான் சில நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் குவாசுலு நடால் மாகாண மலைப் பகுதிகளில் வைரம் கிடைக்கிறது என்ற தகவல் பரவியது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் அங்கு கற்களைத் தேடி எடுத்தனர். இந்த நிலையில் அவை வைரக் கற்கள் இல்லை. வெறும் படிகக் கல் தான் என, ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.


latest tamil news



இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அரசு அதிகாரிகள் கூறுகையில், 'கோவிட் காரணமாகத் தென் ஆப்பிரிக்காவில் கடுமையான வறுமை ஏற்பட்டுள்ளது. வேலையின்மை காரணமாக வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. கோவிட் தீவிரமாகப் பரவும் காலத்தில், இது போன்ற வதந்திகளை நம்பி மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இப்படி அதிகப்படியானோர் ஒரே இடத்தில் கூடுவதால் கோவிட் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவுகிறது. மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்' என்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X