சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடையில் தகராறு: தி.மு.க., பிரமுகரின் மண்டையை உடைத்தவர் கைது

Added : ஜூன் 22, 2021
Share
Advertisement
சேலம்: ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கலில் தலையிட்ட, தி.மு.க., பிரமுகரின் மண்டையை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.சேலம், அரிசிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 40. எல்.ஐ.சி., ஏஜன்டான இவர், கடந்த, 19 காலை, சின்னப்பன் தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்க வரிசையில் நின்றார். கடையில் ஊழியர்களுக்கு உதவியாக பொருட்களை வழங்கும் பணியில், அதே பகுதியை சேர்ந்த, தி.மு.க., இளைஞரணி

சேலம்: ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கலில் தலையிட்ட, தி.மு.க., பிரமுகரின் மண்டையை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.


சேலம், அரிசிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 40. எல்.ஐ.சி., ஏஜன்டான இவர், கடந்த, 19 காலை, சின்னப்பன் தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்க வரிசையில் நின்றார். கடையில் ஊழியர்களுக்கு உதவியாக பொருட்களை வழங்கும் பணியில், அதே பகுதியை சேர்ந்த, தி.மு.க., இளைஞரணி உறுப்பினர் செந்தில்குமார், 42, ஈடுபட்டார். இவர் வரிசையில் நின்ற, தி.மு.க.,வினர், தனக்கு வேண்டப்பட்டவர்களை அழைத்து, பொருட்களை வழங்கினார். அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன், செந்தில்குமாரிடம் கேட்க, அங்கிருந்த ஊழியர்கள், மக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, ராஜகணபதி தெருவில் உள்ள அவ்வை மார்க்கெட்டுக்கு, செந்தில்குமார் வந்தார். அங்கிருந்த கார்த்திகேயன், 'ரேஷன் கடையில் நடந்து கொண்டது சரியில்லை' என சொல்ல, இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த கார்த்திகேயன், கல்லை எடுத்து, செந்தில்குமாரின் தலையில் தாக்கினார். அவரை மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார், கார்த்திகேயனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X