5.5 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி: நன்கொடையாக வழங்க அமெரிக்கா முடிவு

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: 5.5 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி மருந்துகளை உலக நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கும் திட்டத்தை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.கோவிட் பெருந் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துகள், உலகளாவிய கோவேக்ஸ் தடுப்பூசிப் பகிர்வுத் திட்டத்தின் மூலம் ஏழை நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகளில் தடுப்பூசி

வாஷிங்டன்: 5.5 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி மருந்துகளை உலக நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கும் திட்டத்தை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.



latest tamil news



கோவிட் பெருந் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துகள், உலகளாவிய கோவேக்ஸ் தடுப்பூசிப் பகிர்வுத் திட்டத்தின் மூலம் ஏழை நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகளில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது. இதனால் அந்த நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க வல்லரசுகள் முன்வர வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் நடந்த ஜி7 மாநாட்டிலும் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்டோரில் 65 சதவீதத்தினருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தேவைக்கு அதிகமான தடுப்பூசிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், 'இம்மாத இறுதிக்குள், 5.5 கோடி டோஸ் தடுப்பூசிகளை உலக நாடுகளுக் நன்கொடையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், 1.6 கோடி தடுப்பூசிகள் ஆசிய நாடுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்து உள்ளார். 'அமெரிக்காவின் இந்த முடிவால் ஏழை நாடுகள் பயனடைய வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
22-ஜூன்-202120:37:21 IST Report Abuse
Bismi ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு விழுக்காடு மக்களுக்கு மட்டும் தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்தவர்களுக்கே தடுப்பூசி இல்லாத அந்த நாடுகளுக்கு அவை அனுப்பப் படவேண்டும். தூங்கிக் கொண்டு இருக்கும் இந்திய தலைவர்கள் விழித்தெழுந்தால், இந்தியாவிற்கு தேவைக்கு மேல் தடுப்பூசி இருக்கும்.
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
22-ஜூன்-202118:55:08 IST Report Abuse
venkates நீங்கள் வைரஸ் தயார் செய்யாமல் இருந்தால் ,,,நடவடிக்கை எடுக்கலாமே? எதிர்காலத்தில் இது தொடர்ந்தால் ,,அறிவியல் தேவை இல்லையே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X