மூன்றாவது அலை : என்ன அரசின் நிலை? - ராகுல் கேள்வி டிரெண்டிங்

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா இரண்டாவது அலையின்போது பலர் உதவி கிடைக்காமல் உயிரிழந்தனர். தற்போது மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.ஆக்ஸிஜன் கிடைக்காமல் மக்கள் திண்டாடியது, உயிர்களை இழந்து உறவினர்கள் கதறியது என இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கம்
RahulExposesModiGovt, White_Paper, Rahul, corona3rdwave,

புதுடில்லி : கொரோனா இரண்டாவது அலையின்போது பலர் உதவி கிடைக்காமல் உயிரிழந்தனர். தற்போது மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

ஆக்ஸிஜன் கிடைக்காமல் மக்கள் திண்டாடியது, உயிர்களை இழந்து உறவினர்கள் கதறியது என இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கம் அனைவரும் அறிந்ததே. தற்போது நோய் கட்டுப்பாட்டிற்கு வந்தாலும் கொரோனா வைரஸ் உருமாறி வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல், இணையதளம் வாயிலாக பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், ‛‛மோசமான நிர்வாகத்தால் கொரோனா முதல், இரண்டாவது அலையில் நிறைய இழப்பு ஏற்பட்டது. அடுத்து மூன்றாவது அலையும் வரும் என மக்களுக்கு தெரியும். இதன் காரணத்தை கண்டறிய வேண்டும். வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் பெறுவதால் மேலும் பல அலைகள் வரலாம் என நான் கூறுகிறேன். மக்கள் இந்த சமயம் தடுப்பூசி செலுத்துவது அவசியமாகும். தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு இன்னும் விரைவுப்படுத்த வேண்டும்.


latest tamil newsஇரண்டாவது அலையின்போது பலர் உதவி கிடைக்காமல், ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யாததால் நிறைய இழப்புகள் ஏற்பட்டன. பிரதமரின் கண்ணீர் கோவிட்டால் உறவினர்களை இழந்தோரின் கண்ணீரை துடைக்காது. இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாமல் மேற்கு வங்க தேர்தல் வேலகளில் பிரதமர் பிஸியாக இருந்தார். 3வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக வேண்டும். மருத்துவமனைகள், ஆக்சிஜன் படுக்கைகளை தயார்படுத்த வேண்டும் என்றார். மேலும் கொரோனா குறித்த வெள்ளை அறிக்கையையும் காங்கிரஸ் சார்பில் வெளியிட்டார்.

கொரோனா 3வது அலை தொடர்பாக ராகுல் எச்சரிக்கை விடுத்த விஷயமும், மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவர் பேசியதும் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. #RahulExposesModiGovt, #White_Paper ஆகிய ஹேஷ்டாக்குகளில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின. இதில் பதிவான சிலரின் கருத்துக்களை இங்கு பார்க்கலாம்.


latest tamil news* பல குடும்பங்களில் துக்கத்தை காண முடிந்தது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தனர். வேலை பறிபோனது, வருமானம் இல்லை, குழந்தைகள் ஆனாதைகள் ஆகினர். ஆனால் அரசாங்கம் அவர்களுக்கு உதவவில்லை. இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசாங்கம் நிதி வழங்கவில்லை. ஆனால் மோடி மஹால்(புதிய பார்லிமென்ட்) கட்ட மட்டும் பணம் செலவிடப்படுகிறது.
* தடுப்பூசி செலுத்தும் பணி மிகவும் மெதுவாக நடக்கிறது. ஆனால் பா.ஜ. ஆளும் மாநிலங்களில் மட்டும் இந்த பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. பா.ஜ., பொருத்தமட்டில் கோவி தடுப்பூசி செலுத்தப்படுவது கூட ஒரு மார்க்கெட்டிங்காக தான் பார்க்கப்படுகிறது. நாட்டின் சுகாதார விஷயத்தில் எமெர்ஜென்ஸி நிலவுகிறது என அவர்கள் உணரவில்லை.
* ராகுல் கூறுவது சரி தான் பா.ஜ., கூற வேண்டாம். ஆனால் மக்கள் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொரோனா மூன்றாவது அலைக்கு தயாராகுங்கள் என அவர் கூறுவதை ஏற்கலாமே.
* மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர். ராகுல் கூறுவதையும் அரசியலாக பார்க்காமல் மக்களை காப்பாற்ற உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
* கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை வந்தபோது ராகுல் எச்சரித்தார். ஆனால் மோடியும், அவரின அரசும் புறக்கணித்தனர். இப்போதாவது ராகுல் சொல்வதை கேட்டு மூன்றாவது அலைக்கு மத்திய அரசு தயாராக வேண்டும்.
இப்படி பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
22-ஜூன்-202123:54:20 IST Report Abuse
unmaitamil ஆளை பார்த்தாலே கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய ஆளை போல் உள்ளது. பப்புக்கான், முதலில் நீ தடுப்பூசி போட்டாயா ??? அப்படி இல்லாவிட்டால் நீ கொரோனா பரப்பும், கொரோனாவை கட்டுப்படுத்த விரும்பாத, இந்த நாட்டை அழிக்க நினைக்கும் துரோகி . உன்னை முதலில் தனிமை படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
22-ஜூன்-202121:50:02 IST Report Abuse
ஆப்பு மூணாவது அலைதானே..அதுவா வரும்னு நம்பிக்கை இருக்கு. இல்லேன்னா எலக்‌ஷன் கமிஷனை ஏவி எங்கேயாவது தேர்தல் நடத்தச் சொல்லி பறந்து சென்று பராப்புரை செஞ்சு பரப்பிடலாம்னு இருக்கோம். அப்பத்தான் மக்களை முடக்கி, ஆக்சிஜனை வண்டி வண்டியா அனுப்பி மக்களை காப்பாத்திட்டோம்னு மெடல் குத்திக்க முடியும். பப்புவும், நான் அப்பவே சொன்னேன் யாரும் கேக்கலைன்னு பேச முடியும்.
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
22-ஜூன்-202121:45:19 IST Report Abuse
Sivaraman எல்லோரும் சேர்ந்து குறிப்பாக சரத்பவார் உங்கள் மராட்டிய கூட்டாளி ஒரு அலையை உருவாக்குகிறார்கள் . உங்களுக்கு எதிரான அலை . உங்கள் காங்கிரஸ் நிலை பற்றி யோசியுங்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X