நாரதா வழக்கு: மம்தா மேல்முறையீட்டில் தன்னைத்தானே விடுவித்துக்கொண்ட நீதிபதி| Dinamalar

நாரதா வழக்கு: மம்தா மேல்முறையீட்டில் தன்னைத்தானே விடுவித்துக்கொண்ட நீதிபதி

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (22)
Share
புதுடில்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாரதா வழக்கில் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் பணியில் இருந்து, உச்ச நீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ், தன்னைத்தானே விடுவித்துக் கொண்டார்.மேற்கு வங்கத்தில் நாரதா இணையதளம் 2016ம் ஆண்டு 'ஸ்டிங் ஆப்ரேஷன்' நடத்தியது. அதில் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.,க்கள்,

புதுடில்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாரதா வழக்கில் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் பணியில் இருந்து, உச்ச நீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ், தன்னைத்தானே விடுவித்துக் கொண்டார்.



latest tamil news



மேற்கு வங்கத்தில் நாரதா இணையதளம் 2016ம் ஆண்டு 'ஸ்டிங் ஆப்ரேஷன்' நடத்தியது. அதில் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவாக நடந்து கொள்வதற்குப் பணம் பெற்றனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., ஆளுநர் தனகரிடம் அனுமதி பெற்று, அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, எம்.எல்.ஏ., மதன்மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை கைது செய்தது.இதை அறிந்த முதல்வர் மம்தா, சட்ட அமைச்சர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சிபிஐ அலுவலகம் முன் தர்ணா செய்தனர். இதைத் தொடர்ந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமின் வழங்கப்பட்டது.


latest tamil news



சிபிஐ அதிகாரிகள் கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, ஜாமினைத் திரும்பப் பெற்றனர். ஆனால், முதல்வர் மம்தா, 'தங்கள் மீது சிபிஐ அதிகாரிகள் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை உடனடியாக விசாரிக்ககோல்கட்டா உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் மம்தா மேல்முறையீட்டு மனுவை நேற்று தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (ஜூன் 22) நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் அனிருத்தா போஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரிக்கும் பணியில் இருந்து நீதிபதி அனிருத்தா போஸ் தன்னைத்தானே விடுவித்துக் கொண்டார். இதையடுத்து வேறொரு நீதிபதிகள் அமர்வுக்கு அந்த மனு மாற்றப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ் முன்னதாகக் கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X