பொது செய்தி

இந்தியா

கோவாக்சின் 77.8 சதவீத திறனுடையது!

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : தற்போது பயன்பாட்டில் உள்ள, கொரோனா வுக்கு எதிரான 'கோவாக்சின்' தடுப்பூசியின் செயல்திறன் 77.8 சதவீதமாக உள்ளதாக, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.தெலுங்கானா மாநிலம் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'பாரத் பயோடெக்' நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இரண்டு கட்ட
கோவாக்சின்,Covaxin

புதுடில்லி : தற்போது பயன்பாட்டில் உள்ள, கொரோனா வுக்கு எதிரான 'கோவாக்சின்' தடுப்பூசியின் செயல்திறன் 77.8 சதவீதமாக உள்ளதாக, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'பாரத் பயோடெக்' நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இரண்டு கட்ட பரிசோதனைகளுக்கு பின் அவசர கால அடிப்படையில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த ஜனவரியில் அனுமதிக்கப்பட்டது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் செயல்பாடு குறித்து பல்வேறு சர்ச்சைகள், சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன.இந்நிலையில் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் சமர்ப்பித்தது.


latest tamil news
அதை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறன் 77.8 சதவீதம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தடுப்பூசிக்கு விரைவில் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூன்-202114:26:00 IST Report Abuse
Raja Those who have taken covaxin earlier cannot able to travel overseas for work, its mandatory in gulf to be vaccinated. Problem is covaxin is not approved by WHO, only covishield is approved because of collabration with UK Astra zeneca.But china sinopharm is approved by WHO! This clearly shows WHO is the puppet of china.Also Covaxin is indian made if they submit for WHO approval they are demanding more documents. Problem is how people can go to work abroad if they already got vaccinated with covaxin. Govt must make sure that covaxin get approval fast without any delay.
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
23-ஜூன்-202108:39:36 IST Report Abuse
thamodaran chinnasamy கோவாக்ஸின் செயல் திறமை உண்மை என்பதால் தான் சந்தையில் அதனுடைய விலை இரட்டிப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இதை ஏனோ நிபுணர்கள் குழு மறைக்கிறார்கள்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
22-ஜூன்-202120:09:00 IST Report Abuse
Vena Suna முதல்ல 90 % னு சொன்னாங்க. அதை நம்பி போட்டவன் காமெடியனா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X