பொது செய்தி

இந்தியா

இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப துரிதமாக தடுப்பூசி போடுவது முக்கியம்: மத்திய அரசு

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: கோவிட் கட்டுப்பாடுகளை நீக்க, பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க, இயல்பு வாழ்கைக்கு திரும்ப துரிதமாக தடுப்பூசி போடுவது முக்கியம் என மத்திய அரசு கூறியுள்ளது.அனைத்து வயதினரும் பதிவு ஏதுமின்றி நேரடியாக தடுப்பூசிப் பெறலாம் என்ற விதிமுறை நேற்று (ஜூன் 21) அமலுக்கு வந்தது. அதன் மூலம் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் சுமார் 86 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கோவிட்
Rapid Vaccination, Opening Economy, Back To Normal, Centre, கொரோனா, கோவிட், தடுப்பூசி, பொருளாதாரம், இயல்பு வாழ்க்கை, மத்திய அரசு

புதுடில்லி: கோவிட் கட்டுப்பாடுகளை நீக்க, பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க, இயல்பு வாழ்கைக்கு திரும்ப துரிதமாக தடுப்பூசி போடுவது முக்கியம் என மத்திய அரசு கூறியுள்ளது.

அனைத்து வயதினரும் பதிவு ஏதுமின்றி நேரடியாக தடுப்பூசிப் பெறலாம் என்ற விதிமுறை நேற்று (ஜூன் 21) அமலுக்கு வந்தது. அதன் மூலம் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் சுமார் 86 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை தினசரி ஒரு கோடி என உயர்த்தும் இலக்குடன் பணியாற்றி வருகின்றனர். கோவின் இணையதள தகவல்படி இதுவரை 28.6 கோடி மக்கள் முதல் தவனை தடுப்பூசி பெற்றுள்ளனர். 5 கோடி மக்கள் 2 தவனை தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் முதல் தவணை தடுப்பூசி பெற்றுள்ளனர். 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 2 அளவையும் பெற்று முழு பாதுகாப்புடன் உள்ளனர்.


latest tamil news


இந்நிலையில் நிடி ஆயோக் சுகாதார பிரிவு உறுப்பினர் வி.கே.பால் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாம் நமது அன்றாட பணிகளை செய்ய வேண்டும். பள்ளிகள், தொழில்கள் திறக்கப்பட வேண்டும், பொருளாதாரத்தை கவனிக்க வேண்டும். வேகமாக தடுப்பூசி போட முடிந்தால்தான் இவை எல்லாம் செய்ய முடியும். எவ்வளவு சீக்கிரம் போட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். இரண்டாவது அலை இப்போது குறைந்துவிட்டது. இது தடுப்பூசி போட சரியான நேரம். மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டிருந்தாலும் மக்கள் தகுந்த கோவிட் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அதை செய்தால் இந்த காலமும் கடந்து போகும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
23-ஜூன்-202108:06:34 IST Report Abuse
rajan இயல்பு வாழ்கைக்கு திரும்ப துரிதமாக தடுப்பூசி போடுவது முக்கியம் என மத்திய அரசு கூறியுள்ளது ஆனால் எல்லா மாநிலங்களுக்கும் தடுப்பூசிகளை கொடுக்க அடுத்த வருடம் ஆகும்
Rate this:
Cancel
22-ஜூன்-202118:56:07 IST Report Abuse
மும்பை நாநா ஊசி எல்லாம் போட்டுக்க முடியாது. நாங்க வெள்ளை அறிக்கை மட்டும் விடுவோம்.
Rate this:
rajan - erode,இந்தியா
23-ஜூன்-202108:07:25 IST Report Abuse
rajanஊசி எல்லாம் கொடுக்க மாட்டோம் ஆனால் போட வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X