சரத்பவார் கூட்டம்: முக்கிய கட்சிகள் புறக்கணிப்பு| Dinamalar

சரத்பவார் கூட்டம்: முக்கிய கட்சிகள் புறக்கணிப்பு

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (32)
Share
புதுடில்லி: டில்லியில் தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. ஒரு சில கட்சிகள் இரண்டாம் கட்ட தலைவர்களையே அனுப்பி வைத்தன.புறக்கணிப்புபா.ஜ.,வில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, ராஷ்ட்ரா மன்ச் என்ற அமைப்பை உருவாக்கினார். தற்போது, இவர் திரிணமுல் காங்கிரசில்
டில்லி, சரத்பவார், தலைமை, எதிர்க்கட்சிகள், ஆலோசனை

புதுடில்லி: டில்லியில் தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. ஒரு சில கட்சிகள் இரண்டாம் கட்ட தலைவர்களையே அனுப்பி வைத்தன.


புறக்கணிப்பு



பா.ஜ.,வில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, ராஷ்ட்ரா மன்ச் என்ற அமைப்பை உருவாக்கினார். தற்போது, இவர் திரிணமுல் காங்கிரசில் உள்ளார். இந்த அமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டில்லியில், சரத்பவார் தலைமையில், அவரது வீட்டில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.


latest tamil news





கலந்து கொண்டவர்கள்


இதில் ராஷ்டிரிய லோக்தள தலைவர் ஜெயந்த் சவுத்ரி ,தேசிய மாநாட்டு கட்சியின், ஒமர் அப்துல்லா, பா.ஜ.,விலிருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா, ஆம் ஆத்மியின், சுஷீல் குப்தா, கவிஙர் ஜாவேத் அக்தர், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, முன்னாள் தூதர் சிங், முன்னாள் நீதிபதி ஏபி ஷா கலந்து கொண்டனர். கம்யூ., சார்பில் ராஜ்யசபா எம்.பி., பினோய் விஸ்வம், மார்க்சிஸ்ட் சார்பில் நிலோட்பால் பாசு ஆகியோர் கலந்து கொண்டனர். டி.ராஜா, சீதாராம் யெச்சூரி பங்கேற்கவில்லை.


தகவல்கள் தவறு


இந்த கூட்டத்திற்கு பின்னர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மஜீத் மேனன் கூறியதாவது: பா.ஜ.,வுக்கு எதிராக கட்சிகளை, சரத்பவார் ஒருங்கிணைப்பதாக மீடியாவில் வெளியான தகவல் முற்றிலும் தவறு. சரத்பவார் வீட்டில், நேற்றைய கூட்டம் நடந்ததே தவிர, அதற்கு அவர் ஏற்பாடு செய்யவில்லை. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் விவேக் தன்கா, மணிஷ் திவாரி, கபில் சிபல் அபிசேக் சிங்வி மற்றும் சத்ருஹன் சின்ஹா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சிலர், தங்களால் வர முடியாத சூழ்நிலையை விளக்கினர். காங்கிரசை விட்டு விட்டு பெரிய அணி அமைக்க போவதாக வரும் தகவல்கள் தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X